பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெய்குல் இஸ்லாம் தகிய்யுத்தீன் அஹ்மது இப்னு தைமிய்யா
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் இந்த நூல் இஸ்லாமிய அறிஞர்கள், பாமரர்கள் அனைவரின் மத்தியிலும் பெரும் பயனை வழங்கி வந்திருக்கிறது. அன்றாட வாழ்வில் நம்முடைய எல்லா நிகழ்வுகளிலும் இதன் தேவை இருப்பதை இதை வாசிக்கும்போது நாம் உணர முடியும். ஏனெனில், ஒருபுறம் நாவினால் ஓதப்பட வேண்டிய திக்ர்கள், துஆக்களை இமாமவர்கள் தொகுத்திருப்பதுடன், பல நற்செயல்களின் பலன்களைச் சொல்லும் நபிமொழிகளையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளார்கள். இதனால் நாக்கை மட்டுமின்றி, உடல் உறுப்புகளையும் அல்லாஹ்வின் நினைவில் செயல்படத் தூண்டுகின்ற தனித்துவத்தை இதனுள் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பதிப்பு இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ (ரஹ்) அவர்களின் ஆய்வைத் தழுவி வெளியாகின்றது. ஏனெனில், அவர்கள் இந்நூலின் நபிமொழிகள் குறித்த தரத்தை உறுதிசெய்து ஆதாரப்பூர்வமானவற்றின் கல்விக்கு வழிகாட்டியுள்ளார்கள்.