கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெய்க் அஹ்மது ஃபரீது
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2021
Add to Cartகண்களை மூடினால் இருட்டு என்பார்கள். அதெல்லாம் இல்லை; கண்மூடித் தூங்கும்போதும் பட்டப்பகல் காட்சிகளைக் காணத்தானே செய்கிறோம்? கனவு காணும் கண்களின் பார்வைக்கு எத்தனையோ உலகங்கள் தென்படுகின்றனவே? கனவுலக அனுபவத்திற்கும் நமது நனவுலக வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா? உண்டு என்கிறது இஸ்லாம். கனவுகளுக்கென்று எந்த விளக்கமும் இல்லை என்ற மொக்கை வாதம் நாத்திக மூளையில் எழுந்த சீழ் கட்டி. இது அகற்றப்பட வேண்டும். கனவுகளை அகற்ற முடியாது. அவை தொடர்பான அறியாமை அகற்றப்பட வேண்டும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம்மை வழிநடத்துகிற இஸ்லாம், இதிலும் குழப்பங்களை விட்டு நம்மைக் காக்கின்றது. ஏனெனில், கனவின் பெயரால் ஷைத்தான் ஒரு மனிதனின் கொள்கையிலும் வாழ்க்கையிலும் இருட்டைப் போட்டுவிட முடியும். அதனால் கனவு விளக்கம் என்பது இஸ்லாமிய விளக்கமாக இருக்கும் வரை பாதுகாப்பானது. இதன் உளவியல் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும் கல்விக்கொடை. யார் இதன் மூலம் பயன்பெற விரும்புகிறாரோ, அவர் இந்தக் கல்வியின் அடிப்படைகளையும் ஒழுக்கங்களையும் பணிவுடன் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான தொடக்கநிலை வழிகாட்டிதான் ஷெய்க் அஹ்மது ஃபரீது எழுதியுள்ள இந்நூல்.