பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அல்இமாம், அல்ஃபகீஹ் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன்
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2021
Add to Cartபெண்களின் உடற்கூறு மிகவும் தனித்துவமானது. இரத்தம் சிந்துதல் என்பது மனித வாழ்வில் யாருமே தனக்கு விரும்பாத சம்பவமாய் இருக்கின்றது. ஆனால், பெண்ணுக்கு அப்படி அல்ல. அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதம் பெண்ணின் இயற்கையில் மாதந்தோறும் இரத்தம் சிந்துதலே அவளின் பெண்மையைச் செழிப்புறச் செய்கின்றது. அதில் கோளாறுகள் வந்தால் அவளின் உடல்நலன் பாதிக்கின்றது. அவளின் மாதவிடாய்ச் சுழற்சி சீராக இருப்பது அவளது தாய்மை கனிவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவள் கருத்தரிக்கும்போது இரத்தம் சிந்துதல் நின்றுவிடுகிறது. பிரசவத்தின்போது மறுபடியும் அவளின் உடல் இரத்தத்தைச் சிந்துகிறது. ஆனால், இதனால் அவளின் உடல் அவளது பச்சிளங் குழந்தைக்குப் பாலைச் சுரக்கின்றது.
மொத்தத்தில் ஒரு பெண், அவளின் உடலாலும் மனத்தாலும் பெண்ணாக வாழ்ந்து தனது படைப்பில் பூரணத்தை உணர்கின்றாள். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதால், அல்லாஹ்வின் வழிகாட்டல் ஒரு பெண்ணுக்கு இந்த விசயத்திலும் அழகிய சட்டங்களை வழங்கியுள்ளது. மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், தூய்மை சட்டங்களை இந்த நூற்றாண்டின் சிறந்த ஃபகீஹ்களில் ஒருவரான இமாம் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களின் எழுத்தில் மிக எளிமையாக அறிய இந்த நூல் மிகவும் உதவக்கூடியது.
பெண்களின் உடற்கூறு மிகவும் தனித்துவமானது. இரத்தம் சிந்துதல் என்பது மனித வாழ்வில் யாருமே தனக்கு விரும்பாத சம்பவமாய் இருக்கின்றது. ஆனால், பெண்ணுக்கு அப்படி அல்ல. அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதம் பெண்ணின் இயற்கையில் மாதந்தோறும் இரத்தம் சிந்துதலே அவளின் பெண்மையைச் செழிப்புறச் செய்கின்றது. அதில் கோளாறுகள் வந்தால் அவளின் உடல்நலன் பாதிக்கின்றது. அவளின் மாதவிடாய்ச் சுழற்சி சீராக இருப்பது அவளது தாய்மை கனிவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவள் கருத்தரிக்கும்போது இரத்தம் சிந்துதல் நின்றுவிடுகிறது. பிரசவத்தின்போது மறுபடியும் அவளின் உடல் இரத்தத்தைச் சிந்துகிறது. ஆனால், இதனால் அவளின் உடல் அவளது பச்சிளங் குழந்தைக்குப் பாலைச் சுரக்கின்றது.