
யயாதி பாகம் - 2
₹265+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.ஸ. காண்டேகர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :343
பதிப்பு :5
Out of StockAdd to Alert List
இள வயதிலேயே சுகவீனமுற்றதால், சென்னைக்கு வந்து தாயின் ஆதரவில்
பச்சயப்பன் உயர்நிலப்பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
காஞ்சிபுரத்தில் ஒரு வேத பண்டிதரிடம் வேதக் கல்வி பயின்றார். பள்ளிப்
படிப்பை முடித்தும் 1930 ஆம் ஆண்டு இலட்சுமி அம்மாள் என்ற பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டார்.
சென்னையில் இந்திப்
பிரச்சார சபை அச்சகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். சில மாதங்களில் தெலுங்கு,
கன்னடம், மலையாள மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். நாள் தோறும் அச்சுக் கூட
வேலை முடிந்ததும், பெரம்பூரில் இந்தி வகுப்பு நடத்துவார்.
1937ஆம்
ஆண்டு மார்ச் மாதம் மகாத்மா காந்தி சென்னை வந்தார். அப்போது, உ. வே.
சாமிநாதையர் எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தி மொழியாக்கம் செய்தார். இதன்
மூலம் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதனின் அறிமுகம் கிடைத்தது. இதை
தொடர்ந்து கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்.
தமிழகக் காண்டேகர்:
1940களில்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் இலக்கிய ஆக்கங்களை
மொழிபெயர்க்கத் தொடங்கினார். காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள்,
மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல்,
கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், யயாதி, அமுதக்கொடி, ஆகிய 13
நாவல்களும் 150 சிறுகதைகளும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழகக்
காண்டேகர் என்றே இவர் அழைக்கப்பட்டார். காண்டேகரின் பல நூல்கள் முதன்
முதலாக தமிழில் வெளியான பிறகே பிற மொழிகளில் வெளியாயின.
ஒருமுறை
காண்டேகர் கூறினார், "என் தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. நான் அவரை
சந்தித்தது இல்லை. அவரும் என்னை தேடி வந்தது இல்லை. நான் மராட்டி மொழி
எழுத்தாளன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில்தான் அதிகமான வாசகர்கள்
இருக்கிறார்கள். அதற்கு காரணம் மொழி பெயர்ப்பாளர் தான். அவருக்கு நன்றி
தெரிவித்து கொள்கிறேன்". அவரின் வாழ்நாளில் பெற்ற ஒரே பரிசு என
கா.ஸ்ரீ.ஸ்ரீ. குறிப்பிட்டது 1965-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்
எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு விழாவில் பெற்ற மொழிபெயர்ப்பாளருக்காக
வாழ்நாள் சாதனையாளர் விருது.
