அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்
₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகி மணாளன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Add to Cartஎனதருமைக் குழந்தைகளே!
உங்களுக்கு மிகவும் பிரியமான ஒன்று கதை கேட்பது... இல்லையா! அக்கதைகள் இருவகைப்படும். முதலாவது நடந்த கதைகள். மற்றொன்று நடக்காதவை. அதாவது கற்பனைக் கதைகள். ஒருவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுவைபட எடுத்துக்கூறுவது தான் நடந்த கதைகள் எனப்படுபவை. அத்தகைய சுவையான நிகழ்ச்சிகள் பல, உங்கள் வாழ்வில் கூட நடந்திருக்கலாம். அவற்றை நீங்கள் என்றென்றும் மறந்துவிட முடியாது. அவ்வாறு மறந்து போய்விடாமல் அவை உங்கள் நெஞ்சில் நிலைப்பதற்குக் காரணம் என்ன? மற்ற நிகழ்ச்சிகளில் இல்லாத ஏதோ ஒரு வித்தியாசம் - அதாவது சிறப்பு அம்சம் ஒன்று அந்நிகழ்ச்சிகளில் இருக்கும். அந்த அம்சம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தருவதாக இருக்கலாம் அல்லது தீமை பயப்பதாகவும் இருக்கலாம். தீமை பயப்பதாக இருந்தால், மறுபடியும் அந்நிகழ்ச்சி நடைபெறாமல் நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அறிஞர் பலரின் வாழ்வில் நடந்த அத்தகைய மறக்க முடியாத நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுவைப்படக் கதைகளாக்கி, 'அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்' என்ற இந்நூலை உருவாக்கித் தந்துள்ளேன்.