book

நீலம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.ஐ.ச. ஜெயபாலன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391994969
Out of Stock
Add to Alert List

சங்ககாலத்தில்இருந்து வழி தவறி தற்காலத்துக்குவந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க்கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுவழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்.. இவரதுகவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், புணர் நிர்மாணத்தையும் எப்போதும் கனவு கண்டபடி வாசகனிடம்பேசுபவை. இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான கலகக் குரலும், சாதி ஒடுக்குதலுக்கு எதிரானஇடதுசாரி கலகக் குரலும் ஓங்கி ஒலித்த ஒரு காலகட்டத்தில் உருவாகத்தொடங்கிய வ.ஐ.சஜெயபாலனின் கவிதைப் பிரதிகள் ஈழப்போரின் வரலாற்று ரீதியான ஒரு கவிதைக் குரலாகஇன்னும் தொடர்கின்றன. இன்றைக்குதமிழ்த் திரை உலகில் ஒருநடிகராக இவர் அடையாளம் காணப்பட்டபோதிலும், வ.ஐ.ச. ஜெயபாலன்டிஜிட்டல் யுகத்திலும் தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்கும் ஈழத்தின்மிக முக்கியமான ஒரு கவிதைக் குரல்என்றே நான் சொல்வேன். & இந்திரன், கலை இலக்கிய விமர்சகர்