கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்தி ஜோதி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857573
Add to Cartசக்தி ஜோதி (Sakthi Jothi) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒரு தமிழார்வலராவார். கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி மற்றும் சமூகப்பணியாளர் என்று பரவலாக இவர் அறியப்படுகிறார். திண்டுக்கல் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவார கிராமமான அய்யம்பாளையத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டில் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும். அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.