book

ஊடகம் யாருக்கானது?

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணா
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391994884
Add to Cart

தமிழ்மொழி இதழியல் வரலாற்றில் நமக்கு முன்னால் பாரதி, புதுமைப்பித்தன், பெரியார், அண்ணா, திரு.வி.க, கல்கி என்று பலதரப்பட்ட ஜாம்பவான்கள் இயங்கியிருக்கிறார்கள், சிறைப்பட்டிருக்கிறார்கள். திராவிட இயக்கம் சார்ந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு இதழை நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் பலரிடம் எழுத்து ஓர் வலிமையான ஆயுதத்தைப்போல இருந்திருக்கிறதே தவிர, காரியார்த்தமாகவோ, வெறும் விளம்பர நோக்கத்திலோ, வணிக நோக்கத்திலோ அவற்றை நடத்தவில்லை. இன்று ஊடகங்களில் சாதாரண மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் எந்த அளவுக்கு பாரபட்சமற்று முன்வைக்கப்பட்டிருக்கின்றன? இந்தியாவில் தற்போது கருத்துச் சுதந்திரம் அல்லது ஊடகச் சுதந்திரம் எந்த நிலைமையில் இருக்கிறது? உண்மை சார்ந்த செய்தி வருவதையோ, வராமல் இருப்பதையோ யார் தீர்மானிக்கிறார்கள்? எது மக்களுக்கு முன்னால் நாட்டு நடப்பாகக் காட்டப்படுகிறது? குமுதம், துக்ளக், விகடன் குழுமம், தினமணி, புதிய பார்வை, தீராநதி, அஸைட், விஜய் டி.வி, ஜெயா டி.வி, ஜீ தமிழ், நட்பு, தாய் இணையதள இதழ்கள், ஆவணப்படங்கள் என்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றிய பல ஆண்டுகால அனுபவத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பார்வையை உங்கள் முன் வைத்திருக்கிறேன்.