மேய்ச்சல் மைதானம் (முதல் யுத்தம்)
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :312
பதிப்பு :4
Published on :2012
Add to Cartவீடு சிக்கலாகும்போது வெளியே வாழ்க்கை வெற்றி தராது. வீடு என்பது விடுதலையான இடம். விடுதலையை, நிம்மதியை உணரவேண்டிய இடம் போராட்டமாக வெளியுலகில் தவறுகள் நேருகின்றன.
இதனின்றும் மீட்சி எப்படி?
பதினைந்து வயதில் வீடு விட்டு நகர்வது பிள்ளைக்கு நல்லது. வாழ்க்கை முறையை இந்திய-குடும்ப வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.
இரண்டு வெவ்வேறு விதப் பெண் உணர்வுகளுக்கிடையே சிக்காது தாய் என்பவளிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. சுயபலம் அதிகரித்துக் கொள்வதும் தனியே தன் வழியைத் தானே தெரிந்து கொள்வதும் பிற்காலத்தின் தெளிவுக்கு விரைவில் உதவும். துணை என்று வந்தவளை முற்றிலுமாய் மதிக்க-உணர-விலகல் உதவி செய்யும்.