மருத்துவ முன்னோடிகள்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அழ. மீனாட்சி சுந்தரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184766158
Add to Cartஇன்று மருத்துவமனைக்குச் சென்றால் வலிக்காமல் பரிசோதனை செய்துகொள்ளலாம், அல்லது வலி இன்றி அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். இது எப்படி சாத்தியமாயிற்று? வலியைத் தீர்க்கும் மருந்துகளும் மயக்க மருந்தும் இல்லாத பரிசோதனையையும் சிகிச்சையையும் கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருக்கும்! இத்தனை முன்னேற்றத்துக்கும் எவரோ கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்தானே காரணம்? சுஷ்ருதா, சராகா, ஹிப்போக்ரடீஸ், லேன்னக், தாமஸ் க்ரீன் மார்ட்டன், சிக்மண்ட் ஃப்ராய்ட், அலெக்சாண்டர் ஃப்ளெமிங், மேரி கியூரி, வில்ஹெம் கான்ராட் ரான்ட்ஜன், ஜேம்ஸ் யங் சிம்சன், எட்வர்ட் ஜென்னர் போன்ற 24 கண்டுபிடிப்பாளர்களின் மருத்துவக் கண்டுபிடிப்புகளைப் பற்றி சுவையாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். ரொம்ப காலத்துக்கு முன்னரே நோய் உண்டாவதைப் பற்றியும், ஆயுர்வேத மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முறை, ஸ்டெதஸ்கோப், மயக்க மருந்தான ஈதர், க்ளோரோஃபார்ம், உளவியல், எக்ஸ்ரே, பென்சிலின் மருந்து, அம்மைத் தடுப்பு மருந்தான அம்மைப்பால் போன்ற பல கண்டுபிடிப்புகளைப் பற்றி அனேகத் தகவல்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது உங்கள் கைகளில் நூலாகத் தவழ்கிறது. மருத்துவத் துறைக்கு இவர்கள் ஆற்றிய தொண்டுக்கு ஈடு இணை இல்லை. அடுத்த முறை மருத்துவமனைக்குச் சென்று வலியில்லாமல் நோய் குணமாகும்போது இவர்களை ஒரு முறை நினைத்துக்கொண்டு நன்றி சொல்வோம்தானே?