இரவல் கவிதை
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2012
Add to Cartபடைப்புகளில் விஷயங்களுக்கு அவருக்குப் பஞ்சமில்லாமல் போனதற்கு இன்னொரு காரணம், அவர் தனது வாசக வாசகியரோடு கொண்டிருந்த நேரடி, கடித, தொலைபேசி, மேடை, பத்திரிகைத் தொடர்புகள். பதின்பருவ வயதினரை அவர்களுக்கேயான விஷயங்களைத் தந்து வசப்படுத்தி முதலில் கதைக்குள் இழுத்துவிடுவார். ஆனால், அவன் கதையை விட்டு வெளியே செல்கையில், ஒரு பக்குவம் உணர்ந்த தன்மையை அவன் உணர, அவனை அடுத்த படிநிலைக்கு இயல்பாய் நகர்த்த, சதா அவர் தன் எழுத்துகளின் வழியே முயன்றுகொண்டேயிருந்தார். தளர்ந்துபோனவளைத் தாங்கிப் பிடித்து உற்சாகம் தருவதையும் காயம்பட்டவனுக்குக் களிம்பு தடவியதையும் அவர் எழுத்து செய்ததாலேயே அவருக்குப் பெரும் திரளான வாசகர் கூட்டம் இருக்கிறது. அவருக்குப் பின் அது யாருக்கும் இல்லை.