book

இலக்கிய மீள்பார்வைகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. செல்வராசு
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

தமிழ் ஆய்வுலகில் பல்வேறு அணுகு முறைகளின் வரவு புதிய ஒளிகளைப் பாய்ச்சி உள்ளது. தமிழ் இலக்கியப் பிரதிகளை மேலும் மேலும் மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவைகளையும் கட்டாயத்தையும் இந்த அணுகுமுறைகள் தோற்றுவித்துள்ளன. இதனை இக்காலக்கட்டத்தின் தேவையாக உணர வேண்டும். இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் இத்தேவையை உணர்ந்து எழுதப்பட்டவையாகத் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் முதலாக இக்காலம் வரையிலான ஆய்வுகள் இந்நூலில் இடம் பெற்றிப்பதைக் குறிப்பிடவேண்டும். இந்நூலினை உருவாக்கிய சகோதரர் சிலம்பு நா. செல்வரசு தமிழ் ஆய்வில் ஆழமும் அகலமும் கொண்டவர். சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல், சமூகவியல், மானுடவியல் முதலியவற்றில் ஆர்வம் அதிகம். இவை தொடர்பாகப் பல நூல்களை எழுதி அதற்காகப் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர். பழகிட எளிமையும் இனிமையும் கொண்ட இவர் எம் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களின் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர். இவரது நூல்களைக் காவ்யா தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் வரும் இந்த நூலையும் காவ்யா ஆய்வுலகிற்கு வழங்குகிறது.