ஊழல் வாழ்க!
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈரோடு அறிவுக்கன்பன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஎலிகள் வாழ வளைகள் உண்டு. எறும்புகள் வாழக் குழிகள் உண்டு. வண்டுகள் வாழத் துளைகள் உண்டு. நண்டுகள் வாழ வங்குகள் உண்டு. குருவிகள் வாழக் கூடுகள் உண்டு. முயல்கள் வாழப் புதர்கள் உண்டு. கறையான்கள் வாழப் புற்றுகள் உண்டு. பாம்புகள் வாழப் பொந்துகள் உண்டு. விலங்குகள் வாழக் குகைகள் உண்டு. ஆனால் ஆறறிவும் ஆற்றலும் உடைய மாந்தன் வாழக் குடிசை கூட இல்லையே ஏன்?
இந்நூல்களைப் படித்தவர்கள் அறநெறியில் நடப்பர்; நேர்மையானவர் களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும், பிறருக்குத் துன்பம் கொடுக்காதவர் களாகவும், இரக்கம் உள்ளவர்களாகவும், தவறு எதையும் செய்யாதவர்களாகவும், பிறர் பொருளை நாடாதவர்களாகவும், கடமையை ஒழுங்காகச் செய்பவர் களாகவும் இருப்பர் எனக் கூறப்படுகிறது.
இராமாயணம் மகாபாரதம் படித்த இந்தியன் ஏன் அறமற்ற செயல்களில் ஈடுபடுகிறான்? ஏன் உளச்சான்றுக்கு எதிராக ஊழலில் ஈடுபடுகிறான்? ஏன் அறநெறிக்கு மாறாக அஞ்சாது கையூட்டு வாங்குகிறான்? எனவே இராமாயணம் மகாபாரதம் படித்ததால் எத்தகைய பயனும் ஏற்படவில்லை. அவை பயனற்றுப் போய்விட்டன என்பதுதானே பொருள்? அவை எப்படிப் பயனற்றுப் போய்விட்டன போய்விட்டன என்று எடுத்துக்காட்டுவதுதான் இந்நூலின் நோக்கம்.