book

தோற்றப் பிழை

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாரமங்கலம் வளவன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789351350408
குறிச்சொற்கள் :தாரமங்கலம் வளவன்
Add to Cart

தாரமங்கலம் வளவன் அவர்களின் இரண்டாவது தொகுப்பான இந்த ‘தோற்றப்
பிழை’ கதைகளுக்கானது. இதில் குறுநாவல்கள், சிறுகதைகள் மற்றும் குறுங்கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுப்பில் வெளியாகியுள்ள அனைத்து படைப்புகளும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்தவை. தலைப்பு கதையான தோற்றப் பிழை தினமணி கதிரிலும், கத்திச் சண்டை கணையாழியிலும், நினைவு நாள் குறுநாவல் அக்னி மலர்களிலும் வந்துள்ளது. மனைவியின் கையெழுத்து பாக்யாவிலும், ஊர்க் கிணறும், சின்னப்பொண்ணும் காவ்யா தமிழிலும் வந்துள்ளது. மற்ற படைப்புகள் திண்ணையில் வெளிவந்துள்ளன.

பொறியாளரான இவர், தனது பணியின் பொருட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றியவர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த இவர், பிறகு பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு, தற்போது பணி ஓய்வு பெற்று உள்ளார்.

இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘ஊர்க்கிணறும், சின்னப் பொண்ணும்’ கதையானது சமீபத்தில் ஒரு தனியார் தொலைக் காட்சியில் விவாதிக்கப் பட்டு, பாராட்டினைப் பெற்றது.