ஆத்திசூடி மூலமும் உரையும்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஔவையார், பாரதியார், பாரதிதாசன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :48
பதிப்பு :12
Published on :2018
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cartதமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துப் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையார் எவரும் ஔவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றை வேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன.