book

குறள்நெறிக் கவிதைகள்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. நடராஜன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :139
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

அறத்தின் மூலமே பொருளை ஈட்டு. அந்த பொருளின் மூலமே இன்பம் கூட்டு. அறத்தை விட்டால் துன்பம் சேரும். பொருளும் உனது கையை விட்டு உடனே போகும். காதல் இன்பம் கிடைக்காது உனக்கு. இதுவே திருக்குறள் கூறும் வாழ்க்கைக் கணக்கு.

தர்மம் செய்தல், அனைவர் மீதும் அன்பாக இருத்தல், விருந்தோம்புதல், இனிய சொற்களையே கூறுதல், செய்த நன்றியை மறக்காமல் இருத்தல், நடுவுநிலைமை தவறாமல் இருத்தல், அடக்கமாக இருத்தல், ஒழுக்கமாக இருத்தல், பிறன் மனை விரும்பாமல் இருத்தல்,  பொறுமை, பொறாமை இல்லாமல் இருத்தல், பிறர் பொருளை விரும்பாமல் இருத்தல், மற்றவரைப் பற்றிப் புறம் கூறாமல் இருத்தல், தீய செயல்களுக்கு அஞ்சி இருத்தல், இரக்கம் கொள்ளுதல், அருளோடு இருத்தல், புலால் உண்ணாமல் இருத்தல், தவவாழ்வை மேற்கொள்ளுதல், பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமல் இருத்தல், தவவாழ்வை மேற்கொள்ளுதல், பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமல் இருத்தல், வாய்மை, கோபம் கொள்ளாமல் இருத்தல், பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருத்தல், பிற உயிர்களைக் கொல்லாமல் இருத்தல், ஆசையை அறவே ஒழித்தல், மெய்யுணர்வு கொள்ளுதல் இவற்றையே குறள் ''அறம்'' என்று கூறுகிறது.