book

பாவாடைச் சாமியார் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :9
Add to Cart

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (1880-1942) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த துரைசாமியின் தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி, எழுதுவதற்காக வேலையைத் துறந்தார். இவரது மனைவி பெயர் நாமகிரி அம்மாள். தனது புதினங்களை அச்சிட சொந்தமாக அச்சகம் நடத்தினார். தன் படைப்புகளை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாத இதழையும் நடத்தினார். ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி பல தமிழ் புதினங்களை எழுதினார். தமிழில் துப்பறியும் கதைகள் எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர்.இவரது மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத் திருடன், வித்யாபதி போன்ற புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டன. 2009ம் ஆண்டு இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.