book

நேருவின் கனவு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர். இராஜகோபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :74
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123420752
Add to Cart


நேருவின் `கனவு இந்தியா' என்பது அனைவரையும் உள்ளடக்கியது; மதம், சாதி முரண்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்து சமத்துவத்தை நிலைபெறச் செய்வதாகும். மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அதேநேரத்தில், பெண்களின் முன்னேற்றம், விவசாயிகள் மேம்பாடு போன்ற நேரு கண்ட அல்லது காண விரும்பிய `கனவு இந்தியாவை' நோக்கிப் பயணிக்கட்டும் மத்திய அரசின் செயல்பாடுகள்...
நேரு காண விரும்பிய `கனவு இந்தியா' எப்படி இருந்தது?

இந்தியாவில் தற்போது முதிர்ந்துவரும் ஜனநாயகம், நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் கேள்விக்குள்ளாகும் சூழலில், நாடு சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும், நாட்டின் சகிப்புத் தன்மையை வளர்ப்பது பற்றியான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. காஷ்மீரில் எல்லை தொடர்பான பிரச்னை பதற்றமான சூழலில் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கையில். தர்மபுரி, சேலம் என இந்தியா நெடுகிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இப்படியான பதற்றங்களுக்கு இடையே உறுதியான, திடமான இந்தியாவைக் கட்டமைக்க, நாட்டின் முதலாவது பிரதமரும், சுதந்திர இந்தியாவின் சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் கனவுகள் தேவைப்படுகின்றன.