book

ருசியான கதைகள்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

ஒரு எழுத்தாளன் வாழ்கிற காலத்திலேயே இப்படியான நிலை. கதைசொல்லி இதழ்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட போதும், கதை சொல்லியில் கி.ரா. எழுதிய பகுதிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் நண்பர்களின் உதவியைத்தான் நாட வேண்டியதாகிவிட்டது. நானும் கதைசொல்லி இதழ்களை முறையாகத் தொகுத்து வைக்கவில்லை. 'கி.ரா’விடம், "தற்போது ஏன் இப்படி நீங்கள் எழுதி பிரசுரமான படைப்புகளையே சேகரித்து வைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர் “எல்லாம் ஒரு துறவு மனப்பான்மைதான்" என்றார். பிறகு எப்படி உங்கள் எழுத்துக்களை எல்லாம் தொகுத்து நூலாக்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் "அந்த வேலையை யாராவது செய்வார்கள். இப்போதைக்கு கிடைத்த மட்டுக்கும் போதும்" என்கிறார். சமீபத்தில் கி.ரா.எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமல் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்த காதல் கதைகள், சிறுகதைகள், நடைச்சித்திரங்கள், நாட்டார் கதைகள் மற்றும் சில இதழ்களில் பிரசுரமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளது. கி.ரா.வின் கதைகளில் கட்டுரைத்தன்மையும் இருப்பது இயல்புதான். இத்தொகுப்பில் உள்ள காதல் கதைகளில் கி.ரா. ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், முறிந்த காதல், தேர்ந்த காதல் என்று பல்வேறு காதல்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.