book

கோபல்ல கிராமம்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :13
Published on :2021
Add to Cart

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன். "கட்டபொம்மு காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் குடி கிளம்பி வந்து தமிழ்நாட்டில், குருமலைச் சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டுமக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல்."