குழந்தைப்பருவக் கதைகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :157
பதிப்பு :4
Published on :2020
Add to Cartகுழந்தைப்பருவக் கதைகள் என அமைந்த இந்தத் தொகுப்பைப் படித்துப் பார்க்கும்போது பல நினைப்புகள் வந்து போயின. இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளோடு மட்டும் முடிந்து
போய்விடவில்லை, குழந்தமை பற்றிய சமாச்சாரங்கள். இவை போக மற்ற எனது கதைகளிலும் பல இடங்களிலும் சொல்லுகிறேன். முக்கியமாக, “சந்தோஷம்" எனும் சுதையில் முன்னையன் என்று ஒரு
பயல் வருகிறான். வெடுவாச் சுட்டிப் பயல். மனசை அள்ளி விடுவான்! தலைகால் புரியாத சந்தோசம் அவனுக்கு.
இந்தக் கதையை இந்தி மொழியில் "குஷி" என்று தலைப்பிட்டு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் "குஷி" ன்ற தலைப்புதான் சரி. சந்தோசம் என்பதைவிட குஷி என்பதில் ஒரு துள்ளல் இருக்கிறது. மனசும் துள்ளும் உடம்பும் துள்ளும். முன்னையன் அதனால்த்தான் தெருவின் அந்தக் கடேசிக்கும் இந்தக் கடேசிக்கும் அப்படி ஓடுகிறான். லகோ லகோ என்று கூவிக்கொண்டு. அப்படி ஒரு குஷி ஏற்பட்டால் சிறியவனிலிருந்து பெரியவர் வரை எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைத்தான் அந்தக் கதை சொல்லுகிறது. பெரியவர்கள் வரை கதை போய்விட்டதால்த்தான் அந்தக் கதையை இதில் சேர்க்க முடியாமல் போய்விட்டது. இதே காரணத்தினால்தான் "சினேகம்" கதையில் வரும் ராமியையும்
ராஜாவையும் சேர்க்க முடியாமல்ப்போனது. "ஒரு செய்தி"யில் வருகிற அத்தனை வர்ணனைகளும் தீப்பெட்டி ஆபிஸில் வேலை செய்கிற குழந்தைகளைப் பற்றியதுதான் என்றாலும் அதையும் இங்கே
சேர்க்காமல் விடத்தான் வேண்டியதாகிவிட்டது;
சொல்லப்போனால் இந்தப் பத்து எழுத்துக்களிலும் வாய்ப்பாக அமைத்தது "கதவு" ஒன்றுதான். ஒரு அருமையான சிறுகதை. மற்றவை அனைத்தும் வித்தியாசமான வடிவ வகைகள். தான் பெரிதும் விருப்பங்கொள்வது வடிவங்களை நோக்கி அல்ல; விசயங்களை மட்டுமே.வடிவங்கள் என்பவை,
"வாச்சா நமக்கு வாய்க்காட்டா பிள்ளையாருக்கு” என்கிற கொள்கைதான் எனக்கு. வடிவங்கள் அற்ற வடிவங்களிலும் ஒரு தனீ அழகு உண்டு என்பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். வடிவங்களை உடைத்தும் வடிவங்கள் தரமுடியும். தமிழ்க் கதை உலகில் இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.