book

உன்னால் கடக்க முடியும் (பாகம் - 1)

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :225
பதிப்பு :2
Published on :2018
ISBN :9788184027532
Add to Cart

இங்கே ஒருவர் இருக்கிறார், ஓஷோ. அவர் இந்த மணல்களைக் கடந்தவர். இப்போது மற்றவர் கடந்து போக உதவுகிறார். ஆன்மாவிற்கான ஒரு மார்க்கோ போலோ. ஒவ்வொரு பயணமும் வேறுவேறென்றாலும், எங்கே அழைத்துச் செல்கிறார் என்பதை அவரறிவார், ஏனெனில் அவர் அங்கேயே இருப்பவர். வீடு சென்றடைந்தவர். வித்தைக்கார சைக்கிள் ஓட்டிகள் இங்கே அதிக தூரம் செல்ல முடியாது. நீங்கள் ஒரு கால்நடையராக இருக்க வேண்டும், சாதாரணமாக, ஒவ்வொரு காலடியாக, வழிகாட்டி எங்கே அழைத்துச் செல்கிறாரோ தன்னார்வத்தோடு பின்பற்றவேண்டும். நம்பிக்கை கொள்ளுதலினாலும், நெகிழ்வதினாலும், பாதங்கள் லேசாகின்றன. மகிழ்ச்சி அடைகின்றன. ஒரு துள்ளல் ஏற்படுகின்றது. பிறகு ஒரு தாண்டுதல், துள்ளல், பின் குதிப்பு விரைவிலேயே நீங்கள் உயர உயரப் பறக்கின்றீர்கள், ஒரு பறக்கும் கால்நடையர்!