ஈஷா யோகா ( உயிரை அறியும் விஞ்ஞானம்)
Isha Yoga (The Science of Life)
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்குரு
பதிப்பகம் :ஈஷா அறக்கட்டளை
Publisher :Isha Foundation
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788187910862
Add to Cartஈஷா அறக்கட்டளை ஒரு மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத, பொதுத் தொண்டு ஆன்மீக அமைப்பாகும், இது 1992 இல் இந்தியாவின் கோயம்புத்தூர் அருகே சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் நிறுவப்பட்ட நிறுவனமாகும். தற்போது உலகளவில் 150 மையங்களைக் கொண்டு மனிதநேய அமைப்பாக திகழும் இந்த அமைப்பு, நாடு மற்றும் கலாச்சாரம் போன்ற எல்லைகள் தாண்டி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உள்நிலை மாற்றத்திற்கான ஈஷா யோகப் பயிற்சிகளிலிருந்து, மனித சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான அதன் திட்டங்கள் வரை ஈஷாவின் செயல்பாடுகள் அனைத்தும், உலகின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் அடிப்படையான ஒருங்கிணைந்து செயல்படும் பண்பாட்டைக் கொண்டதாக உள்ளது. இந்த அணுகுமுறை, உலகளவில் ஈஷாவிற்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருப்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு (ECOSOC) அமைப்பும் ஈஷா அறக்கட்டளைக்கு சிறப்பு ஆலோசகர் தகுதியை வழங்கியுள்ளது.
உலகெங்கிலுமுள்ள இதன் 150க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆதரவுடன் ஈஷா அறக்கட்டளை ஆற்றிவரும் பணிகள், மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றிக் கொள்ளவும், உறவு முறைகள் மற்றும் தன்னிறைவு நிலைகளை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களுள் பொதிந்துள்ள முழு ஆற்றலை உணரவும் ஓர் உறுதுணையான சூழ்நிலையை வழங்குகின்றன