book

சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்குரு
பதிப்பகம் :ஈஷா அறக்கட்டளை
Publisher :Isha Foundation
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :67
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு

இந்த பூமியில் இலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல வளர்ச்சியில் நமது மூளையின் செயல்பாடு நிச்சயமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அறிவுத்திறனும் புரிதலும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட வளர்ச்சி நடந்திருந்தாலும் வாழ்க்கை என்பது மேலும்மேலும் புதிராகத்தான் இருக்கிறது.

எப்போதுமே உங்கள் கவனம் தற்போதிலிருந்து வேறு ஒன்றிற்கு மாறுவதிலேயே இருக்கிறது. அது எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அதைவிட்டு வெரு சீக்கிரத்தில் வெளியே வர விரும்புகிறீர்கள். கடவுளின் மடியில் இருந்தாலும் கூட நீங்கள் அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அதைவிட்டு வர முயற்சிக்கிறீர்கள்.

நீங்களே உருவாக்கிய ஒன்றை நீங்களே உடைப்பது மிக கடினம். அதற்கு தெளிவான புரிதல் அல்லது வெளிப்புற உதவி தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் அவற்றை உடைக்க வெகுகாலம் பிடிக்கும்.

உங்களுக்குள் காலம்காலமாக சேர்த்து வைத்திருக்கும் நினைவுகளின் பதிவுகள், அந்த பதிவுகளின் குவியல்கள், எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமான வடிவங்களைக் கொள்கிறது. அதவே மிகவும் சிக்கலான சிறையாக ஆகிவிட்டது. அதிலிருந்து நீங்கள் வெளிவருவது என்பது இயலாநதாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் யார்?"" என்பதே அதன் சுட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

சத்குரு