| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
| ||
| ||
தொடர்புடைய புத்தகங்கள் : | ||
| ||
ஆசிரியரின் (கவிஞர் இரா. இரவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : | ||
| ||
மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் : | ||
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : | ||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்
கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு
நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்
இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்
பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி
உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி
நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி
தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி
தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி
நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?
மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மூளை மரணம்
பயன்பட்டது பலருக்கு
உடல் தானம்
இருவருக்கு விழியானான்
இறந்தவன்
விழி தானம்
உணர்த்தியது
நிரந்தரமற்றது அழகு
வானவில்
இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்
விஞ்ஞானிகளின் ராக்கெட்டை
வென்றது சிவகாசிச்
சிறுவனின் ராக்கெட்
விலைவாசி ஏற்றம்
ஊதியத்தில் இல்லை மாற்றம்
வேதனையில் தனியார் பணியாளர்கள்
ஆயிரம் பேரிலும்
தனியாகத் தெரிந்தது
அவள் விழிகள்
விலை மதிப்பற்றது
விவேகமானது
அன்பு
மலரும் நினைவு
வளரும் கனவு
அவள் முகம்
கவிஞர் இரா .இரவி
நீளம் சக்கரமானது
தொட்டது சுருண்டது
ரயில் பூச்சி
எருக்கம் பூ
ரோசாப்பூ
பேதமின்றி ஆதவன்
முதலிடம் தமிழகம்
முட்டாள் தனத்தில்
அட்சயதிரிதியில் தங்கம்
வென்றாள் கண்ணகி
சிலப்பதிகாரத்திலும்
சிலை அதிகாரத்திலும்
எதுவும் செய்வான்
செய்யாமலும் இருப்பான்
அவளுக்காக
ஹைக்கூ கவிதை
தன்னம்பிக்கை
வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
ஹைக்கூ இரா .இரவி
உயிரோடு
கண் தானம்
காதலர்கள்
இதழ்களின்
ஒத்தடம்
இனிய நினைவுகள்
தடையின்றி
மின்சாரப்பரிமாற்றம்
காதலர்கள்
அடுத்தவர் உதவியில்
காவல்துறை வாழ்த்து
விளம்பர லஞ்சம்
மது வியாபாரம்
போதை மறுவாழ்வு
இரண்டும் அரசிடம்
இயற்கையை அழித்துவிட்டு
செயற்கை மரங்கள்
நகரங்கள்
ஆய்வின் முடிவு
நல்லது நடைப்பயிற்சி
வளர்க்கும் நினைவாற்றல்
கண் கலங்க வைப்பான்
உரித்தால் ஒன்றும் இல்லாதவன்
வெங்காயம்
காயமில்லாத விபத்து
நீடித்தால் ஆபத்து
காதலர்கள் சந்திப்பு
நீரின் வீழ்ச்சி
நதியாக நடந்தது
மனிதன் ?
இரண்டும் இல்லை இன்று
போதிமரம்
புத்தன்
இரண்டும் ஒன்றுதான்
கழுதையின் முன் பின் கழிவு
அரசியல்
தேனும் பாலும் ஓடும் என்பார்கள்
வென்றதும்தேனீயாக
ஓடி விடுவார்கள்
உன்னதக்கொடை
உயிர்க்கொடை
குருதி தானம்
ஹைக்கூ இரா .இரவி
பொய் மட்டுமே மூலதனம்
அமோக வருமானம்
அரசியல்
தொட்டில் முதல் சுடுகாடு வரை
தொடரும் கொடிய நோய்
லஞ்சம்
வறுமை ஒழியவில்லை
வளங்கள் இருந்தும்
கருப்புப்பணம்
ஏழை மேலும்ஏழையானது போதும்
விரைவில் வேண்டும்
மாற்றம்
பிரதமரால் அன்று
கோடீஸ்வரர்களால் இன்று
மந்திரி பதவி
அளவு சுவை
இரண்டும் பெரிது
அவள் இதழ்கள்
இதழ்கள் பேசவில்லை
விழிகள் பேசின
மொழி பெயர்தது மனசு
ஏமாளிகள் உள்ளவரை
எமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை
சாமியார்கள்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
அனைத்தும் அறிவோம் என்றவர்
அறியவில்லை கேமிரா
சாமியார்
உபதேசம்
பிரம்மச்சரியம்
சல்லாபத்துடன்
கோடிகள் குவிந்தும்
பட்டினியாகவே
கடவுள்
தங்கத்தின் ஆசை
விதிவிலக்கல்ல
கடவுள்களும்
வயது கூடக் கூட
அழகும் கூடியது
அவளுக்கு
ஹைக்கூ இரா .இரவி
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து
மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து
இயற்கையில் செயற்கை
சிகைத் திருத்தமென
செடித் திருத்தம்
பொறாமை கொள்ளவில்லை
மரத்தைப் பார்த்து
புற்கள்
வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்
பார்ப்பதில்லை
காதல் காட்சி
அவளையே ஞாபகப்படுத்துவதால்
நீளமான கூந்தல்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவு
பெரிய சோகத்தையும்
நொடியில் அழிக்கும்
அவள் புன்னகை
மறக்க நினைத்தாலும்
முடிவதே இல்லை
அவள் முகம்
நல்ல கவிதைகள்
நூலாகுமுன் இரையானது
கரையானுக்கு
புவி ஈர்ப்பு விசை நியூட்டன்
விழி ஈர்ப்பு விசை
காதலர்கள்
மதங்களை விட
மிகவும் உயர்வானது
மனிதம்
பிரிவால் துடி துடித்தது
அறுபட்ட
பல்லியின் வால்
சிந்தைகளை
சிதைத்து
கேளிக்கைகள்
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் தோல்வி
இந்தியா
அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு
தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்
இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை
ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்
அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்
நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்
பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்
வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்
போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்
குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்
வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்
கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா
சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்
காதல் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்
உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்
கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்
செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்
கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்
காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்
விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்
இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்
விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்
சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்
வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்
பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்
—
கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிதை
பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி
பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்
வானத்திலும் வறுமை
கிழிசல்கள்
நட்சத்திரங்கள்
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்
உயரத்தில்
பஞ்சுமிட்டாய்
வான் மேகம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
ஆயத்தம்
பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி
சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்
கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…
அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்
கோடை மழை
குதூகலப்பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்
வானம்.
கட்சி தாவியது
அந்திவானம்.
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி
மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ
என்னவளே உன்
முகத்தைக் காட்டு…
முகம் பார்க்கவேண்டும்
ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினியில் வைரஸ்
மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்…
நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்
கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு
நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்
இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்
பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி
உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி
நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி
தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி
தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி
நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?
மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி
கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை
சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை
கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி
இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்
உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை
இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்
தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ
சங்க இலக்கியத்தை
சாமானியருக்குச் சமர்பித்தவர்
கவியரசு
திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு
நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு
பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு
தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு
நடிகர் திலகம் மக்கள் திலகம்
சிகரமடைய காரணமானவர்
கவியரசு
காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவி புனைந்தவர்
கவியரசு
கொடிக்கட்டிப் பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு
ரகசியம் இல்லாத
அதியசக் கவிஞர்
கவியரசு
முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு
கள்ளம் கபடமற்றவர்
குழந்தை மனம் படைத்தவர்
கவியரசு
கண்ணே கலைமானே
கடைசியாகப் பாடியவர்
கவியரசு
பாதித்தவர்கள் கவிஞர் இரா .இரவி
சபிக்கிறார்கள்
மின்தடை
வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை
அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை
தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை
தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை
வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை
ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்
விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை
வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை
வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கூடுதலாக உண்டு
தாய்மண் பாசம்
புலம் பெயர்ந்தவர்களுக்கு
வெந்நீர் ஊற்றியபோதும்
வளரும் செடிகள்
புலம் பெயர்ந்தவர்கள்
பயன்பட்டது
சாக்கடைநீரும்
தீ அணைக்க
கூடலின் அருமை
உணர்த்தியது
ஊடல்
ஈடில்லா வேகம்
பின்னோக்கிப் பார்ப்பதில்
மலரும் நினைவுகள்
உடலின் மச்சமென
நீங்காத நினைவு
காதல்
இனிமை இனிமை
சின்னத் தீண்டல்
சிந்தையில் கிளர்ச்சி
கோலமிட்டுச் சென்றது
சாலையில்
தண்ணீர் லாரி
பிணமானபின்னும்
காசு ஆசை
நெற்றியில் காசு
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா
வந்துவிட்டது
சேலையிலும் சைவம்
சைவப்பட்டு
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்
அயல்நாட்டில் ஊறுகாய்
நம்நாட்டில் சாப்பாடு
தொலைக்காட்சி
மழை வந்ததும்
உடன் வந்தது
மண்வாசைனை
ஹைக்கூ இரா .இரவி
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை
இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்
மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி
பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி
ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி
பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்
கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்
திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்
முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்
வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்
உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்
விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஈழத்தில் மரித்த உயிர்கள்
இன்று பழி தீர்த்தன
முறிந்தது கூட்டணி
மூன்று சீட்டு சண்டை
முச்சந்திலும்
அரசியலிலும்
ஆடிய ஆட்டம்
நொடியில் முடிந்தது
அரசியல்
நேற்று இருந்தார்
இன்று இருப்பதில்லை
அரசியல்
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும்
அரசியல்
எண்ணங்களால் அன்று
எண்ணிக்கைகளால் இன்று
கூட்டணி
விரைவில் காதல்
விரைவில் திருமணம்
விரைவில் மணவிலக்கு
வேண்டாம் இனி
கொலைகாரனாக்கியது
பேருந்து தினம்
கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதிமரம்
நல்ல கூட்டம்
பித்தலாட்டப் பயிற்சி
சோதிடப் பயிற்சி
புரட்டு அங்கிகாரம்
பல்கலைக்கழகப்பாடத்தில்
சோதிடம்
வேடந்தாங்கல் செல்லாத
இரும்புப்பறவை
விமானம்
நேசித்தால் இனிக்கும்
யோசித்தால் கசக்கும்
வாழ்க்கை
சுறுசுறுப்பின் சின்னம்
பறக்கச் சலிப்பதில்லை
தேனீ
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?
சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?
நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?
பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?
பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?
அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?
காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?
சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?
ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?
அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு
கொள்ளையர்களின்
கூடாரமானது
கல்வி நிறுவனங்கள்
நிறங்கள் ஹைக்கூ இரா.இரவி
அன்பின் நிறம் இன்று
வம்பின் நிறமானது
காவி
பொதுவுடைமை நிறம் இன்று
தனியுடைமை நிறமானது
சிவப்பு
பசுமை வயல்கள்
பன்னாட்டு நிறுவனகளால்
கொள்ளை போனது பச்சை
பகுத்தறிவு வாதியின்
மூடநம்பிக்கை நிறமானது
மஞ்சள்
பெரியார் அணிந்த போது நன்று
களங்கம் வந்தது இன்று
கருப்பு
இணையத்தில் இரவி
கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
சாதனமா?சீதனமா?
அன்று தமிழ் வளர்க்க, அதியமான் தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கி கடையெழுவள்ளல்களுள் ஒருவனானான்.இன்றோ இலக்கிய ஆர்வலர்களுக்கு இல்லம் தேடிவந்து தமிழ் இணையதளங்கள் கனியை வழங்கிச் செல்கின்றன. இளைய தலைமுறையினருக்கு அறிவியல் தந்திருக்கும் அதிசய சாதனமே இணையம்.இயந்திரயுகத்தில் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியரசனை மிக்கவர்களுக்கும் கால இடைவெளி மற்றும் தூர இடைவெளியைக் குறைக்க வந்த தகவல் தொடர்பு சாதனமே தமிழ் இணையம் எனலாம்.
ஆறிலிருந்து அறுபதுவரை :
!ஏட்டில் படித்த நாளும் போய்,புத்தகத்தைப் புரட்டிய காலமும் படிப்படியாய் மாறி,இன்று ஆறிலிருந்து அறுபதுவரை இணையத்தை நாடுவது நடைமுறையாகிவிட்டது.காலத்தின் ஓட்டத்தில் தமிழின் அவசியத்தை வளரும் தலைமுறையினர் புரிந்துகொள்ள,உலகின் பிறமொழிகளோடு தமிழ்மொழியும் ஈடுகொடுத்து நடைபோட,மொழிப்பற்றைப் பெருக்க-என பல்வேறு நற்பணிகளைச் செய்துவரும் ஒரு வியத்தகு சாதனமே இணையம் கவிக் களஞ்சியம்:. அன்றாடப் பணிகளால் மனம் அயர்ந்து, சற்றே இளைப்பாற எண்ணி தமிழ் இணையத்திற்குள் புகுந்தேன்.கண்ணிற்பட்டது கவிமலர்.காம். அத்தளத்தில் புதுக் கவிதை,ஹைக்கூ,நகைச்சுவைத் துணுக்குகள் என எண்ணற்ற படைப்புக்கள்.கவிமலரை உருவாக்கிய பிரம்மா யாரென உற்றுநோக்கினேன்.அம்மூலவர் யாரெனில் மதுரைக் கவிஞர் இரா.இரவி.தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் மதுரைப் பிரிவின் துணைஅதிகாரியாகப் பணியாற்றிவரும் இவர் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களிலும் உலா வருவதை அறிந்தேன்.கவிமலரோடு மேலும் மூன்று வலைதளங்கள் இவருக்கு இருப்பதும் தெரியவந்தது.இந்த நான்கு தளங்களும் முப்பத்தி நான்கு வலைதளங்களோடு இணைக்கப் பட்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றே.இன்னும் ஒரு ஆச்சிரியப்படத்தக்கச் செய்தி என்னவெனில், கவிஞர் இரா.இரவியின் கவிமலர்.காமைப் பார்வையிட்டவர்கள் நான்கு இலட்சத்திற்கும் மேலான இலக்கிய பிரியர்கள் என்பதே.இவையெல்லாம் ஒருபுறமிருக்க,தற்செயலாக தமிழ்த்தோட்டம் எனும் இணையத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் பெரும்பான்மையான இலக்கியப் பதிவுகளைச் செய்தமைக்காக செவ்வந்தி எனும் சிறப்புப் பட்டம் பெற்றிருக்கும் செய்தியும் அறியமுடிந்தது.ஈகரை களஞ்சியம் எனும் தமிழ் இணையத்திலோ இவரது படைப்புக்கள் நிரம்பி வழிகின்றன.
எங்கும் எதிலும்:
எழுத்து.காமில் இவரது கவிதைகள் சிறப்புத்தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.தாளம்.நியூஸ்.காமிலோ இரா.இரவியின் நூல் விமர்சனங்களை வாசிக்க நேர்ந்தது.தான் ஒரு படைப்பாளியாக இருந்து பத்துக்கும் மேலான கவிதை நூல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் பிறரது சிறந்த நூல்களுக்கான விமர்சனங்களையும் வாசகர் என்ற நிலைக்கு மாறி, எழுதி இணையத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.இவரது ஒவ்வொரு விமர்சனமும் உணர்ந்து வாசிக்கப்பட்டு படைக்கப்பட்ட உன்னத விமர்சனமாகும்.படைப்பாளி தரமான நூலைப் படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நிறைகளோடு நூலில் குறையிருந்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டவும் இரா.இரவி தவறுவதில்லை.
மதிப்புரையும் தொகுப்புரையும்:
இவரது படைப்புக்கள் நான் வாசித்தறிந்த வரையில் முப்பதுக்கும் மேலான தமிழ் இணையங்களில் பதிவு செய்யபட்டிருக்கின்றது.கவிதை, திறனாய்வு மட்டுமல்லாது தான் நேரில் சென்று கேட்டறிந்த பிரபலமானவர்களின் சொற்பொழிவின் தொகுப்புரையும் தமிழ் இணையங்கள் பலவற்றிலும் இவரால் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும் இலக்கிய ஆர்வலர்களின் வசதிக்காக இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களின் வழி தமிழ்.ஆத்தர்ஸ்.காமில் தவறாது அழைப்பு விடுப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.இதுபோல் நடந்து முடிந்த இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் முக்கிய நிகழ்வின் புகைப்படங்களும் கவிஞர் இரா.இரவியால் பல்வேறு தமிழ் வலைதளங்களில் பொருத்தப்பட்டிருப்பதும் அவரது தமிழியல் ஆர்வத்தை புலப்படுத்துகிறது.
ஈடு இணையுண்டோ?
. கவிஞர் இரா.இரவியின் கவிதைகள் மூடத்தனத்தின் முதுகெலும்பை முறிக்க வருவன,பழமை மரபைச் சாடுவன,புதுமையைப்புகுத்துவன,தமிழின உணர்வை வெளிப்படுத்துவன,பெண்மையைப் போற்றுவன,இயற்கையை வியந்து பாடுவன,சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டுவன-என சொல்லிக்கொண்டே போகலாம்.தேசத்தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள்,நடப்புச்செய்தி இவற்றையெல்லாம் மனதில் வைத்து அவ்வப்பொழுதில் இணையத்தில் கவிதைகளை மறவாது பதிவு செய்வதில் கவிஞர் இரா.இரவிக்கு ஈடு இணை வேறு எவருமில்லை.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு ஹைக்கூ:
“தாயிருக்க சேய்
சேயிருக்க தாய்
சுனாமி!”
இயற்கையை வியத்தல்:
“இயற்கை எனும் கவிஞன்
வானம் எனும் தாளில்
எழுதிய கவிதை வானவில்!”
ஆங்கிலத்திலும்துளிப்பாக்கள்:
Rainbow:
“sweet verse
written on skypaper
By nature poet”(kavimalar.com)
அன்று முதல் இன்றுவரை கவிஞர்கள்:
திருவள்ளுவர்:
“தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே
தமிழுக்கு மகுடம் சூட்டிய மாண்பாளன்” தாளம்.நியூஸ்.காம்
கவி சுரதா:
“இவர் பாடாத உவமை இல்லை!
இவர் பாடாத உவமை உவமையே இல்லை!”
அப்துல்கலாம்;
“செய்தித்தாள் விற்றுப் படித்து
தலைப்புச் செய்தி ஆனவரே”
என்று மேனாள் குடியரசுத் தலைவரைப் பாடியதோடு அவரின் அழைப்பின்பேரில் கலாமைச் சந்தித்து அவரின் பாராட்டுதல்களைப் பெற்ற பெருமை கவி இரவிக்கு உண்டு.கவிமலர்.காம் இதனை புகைப்படத்துடன் நிரூபணம் செய்கின்றது.
கவி இரவி காலத்தோடு கைகோர்க்கும் திறம்:
அணுகுண்டு போட்டனர்!
புல்பூண்டு கருகியது!
உயிர்கள் ஒழிந்தன!
ஓய்வின்றி உழைத்தனர்.
உச்சம் தொட்டனர்!
சுனாமி வந்தது!
சும்மா புரட்டிப் போட்டது!
அணு உலை வெடித்தது!
ஆருயிர்கள் மடிந்தன!
இனியும் உழைப்பர்!
உலகின் உச்சம் தொடுவர்!
விதியை நினைத்து
வீழமாட்டார் ஜப்பானியர்! (எழுத்து.காம்)
பெண்மைகுறித்த கவிதை:
“பெண்ணைக் குறை சொன்னால் பொறுத்துக் கொள்வாள்!
பெற்றோரைக் குறை சொன்னால் கொதித்து எழுவாள்!” ” (தன்னம்பிக்கை.காம்)
மனதார…
தமிழ் இணையத்தின் எந்தவொரு வலைதளத்தில் புகுந்தாலும் கவி இரா.இரவியின் படைப்புக்களைப் பார்க்க இயலும்.பெரும்பாலோர்க்கு வீடே உலகமாக இருக்க கவிக்கோ இணையமே உலகமாக இருப்பது தெள்ளத்தெளிந்த உண்மை.பதினாறு விருதுகளைப் பெற்ற பெருமையினை உடைய இவருக்கு இணையம் சார்பான விருதினை வழங்காமல் இருப்பது ஏனோ? என்ற ஆதங்கம் என்போன்ற இணையதள வாசகர்க்கு உண்டு.கவி இரவியின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்
மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையே படுத்துகின்றது
பணம்
எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை
அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு
சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு
தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்
தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்
மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்
இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி
எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி
மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை
எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்
அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது
கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
வானிலிருந்து வரும்
திரவத்தங்கம்
மழை
இரண்டும் சமம்
மலை மண்
மழைக்கு
கழுவும் நீரே
அழுக்கு
சுத்தம் ?
ஓய்வுக்கு ஒய்வு
தந்தால்
சாதிக்கலாம்
சாதனைக்கு
முதல் எதிரி
சோம்பேறித்தனம்
தண்ணீரைப் பெட்ரோலாக்கி
வித்தைக் காட்டியவரிடம்
வித்தைக் காட்டியது இயற்கை
எலி மீது யானை
எப்படிச் சாத்தியம்
பிள்ளையார்
உருண்டது
உலோகக் குண்டென
தாமரையிலைத் தண்ணீர்
கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்
பல் பிடுங்கிய
பாம்பாக
தோற்ற அரசியல்வாதி
இன்றும் சொல்கின்றது
மன்னனின் பெயரை
அரண்மனை
பெருமூச்சு விட்டாள்
தங்கக்கோபுரம் பார்த்து
முதிர்கன்னி
கல்லுக்குள் தேரை
பாறைக்கு மேல் செடி
மனிதனுக்குள் மனிதநேயம் ?
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி கவிஞர் இரா .இரவி
தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன்
தகைசால் பேராசிரியர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .
இரா .இரவி அன்னைத் தமிழினைத் தம் உயிரினும் மேலாக நேசிப்பவர் .அல்லும் பகலும் இடைவிடாமல் இலக்கியங்களை வாசிப்பவர் .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் முற்போக்குச் சிந்தனைகளையே தம் மூச்சுக் காற்றாய்ச் சுவாசிப்பவர்.பாரத மணித் திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ .ப .ஜே அப்துல் கலாமின் வழியில் இளைய தலைமுறையினரின் நெஞ்சகளில் விழிப்புணர்வை விதைப்பது பற்றியே தீவிரமாக யோசிப்பவர் .சுருங்கக் கூறின்,முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி என ரவியைச் சுட்டலாம்.அவர் பணியாற்றுவது சுற்றுலாத் துறையில் ,அவர் மிகவும் விரும்புவதோ தமிழ் உலாவை. கணினியும் ,இணைய தளமும் அவருக்கு இரு கண்கள் ,இலக்கியச் சீரிதழ்களின் செல்லப்பிள்ளை இரா .இரவி.என் மனதில் பட்டதை எவருக்கும் அஞ்சாமல் ஹைக்கூவாக வடித்துள்ளேன் .உள்ளக் குமுறலை ,கோபத்தை ,சமுதாய விழிப்புணர்வை விதைத்துள்ளேன் .(மனதில் ஹைக்கூ ப 8 )என மனதில் ஹைக்கூ தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் இரா .இரவி.
வீரத்தில் சிங்கமாய்
வேகத்தில் சிறுத்தையாய்
எப்போது மனிதனாவாய் ? (விழிகளில் ஹைக்கூ ப 1 8)
என்னும் ஹைக்கூ கவிஞரது உள்ளக் குமுறலின் எதிரொலி ஆகும் .
சிங்கம் ,சிறுத்தை ,சுறா ,நடுநிசி நாய்கள் என்றார் போல் இன்று வெளிவரும் திரைப்படங்களின் பெயர்களைப் பார்த்தாலும் கவிஞரின் உள்ளக் கருத்து உறுதிப்படும் .
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு ?என்று கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் .அவர்களது அகராதியில் பெண் என்றால் இன்னொரு வீட்டிற்குப் போகப் போகிறவள் .பெண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு நிகரான உயர் கல்வி தேவை இல்லை .
படிப்பு எதற்கு ?
அடுப்பூதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை (நெஞ்சத்தில் ஹைக்கூ ப 5)
. என்னும் ஹைக்கூ கவிஞரது கோபத்தின் வெளிப்பாடு ஆகும் . இரா .இரவியின் கருத்தியலில் வாழ்க்கை என்பது உண்பது ,உறங்குவது மட்டும் அன்று .மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதே வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை.
கருவறை கல்லறை
இடைவெளி மட்டுமல்ல
வாழ்க்கை (மனதில் ஹைக்கூ ப 45)
எனத் தம் ஹைக்கூ ஒன்றில் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வைப் பதிவு செய்துள்ள இரவி . தமிழக மக்களின் நாவில் பயின்று வரும் பழமொழிகளையும் ,மேலோரின் விழுமிய மேற்கோள்களையும் தமக்கே உரிய பாணியில் பயன்படுத்திக் கொள்வதில் கை தேர்ந்தவர் இரவி. கோழி மிதித்து குஞ்சுகள் சாகுமா ?என்பது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழி ,இதன் அடிப்படையில் இன்றைய சமூக அவலத்தை வெளிப்படுத்தும் அழகிய ஹைக்கூ ஒன்றினைப் புனைந்துள்ளார் இரவி.
குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம் (மனதில் ஹைக்கூ ப 61)
தமிழன் என்று சொல்லடா – தலை நிமிர்ந்து நில்லடா ! என்பது நாமக்கல் கவிஞரின் எழுச்சிமிகு முழக்கம் .இதனைத் தம் ஹைக்கூ ஒன்றில் திறம்படக் கையாண்டு ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவோரைக் கடுமையாகச் சாடியுள்ளார் இரவி.
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா ?(விழிகளில் ஹைக்கூ ப 22 )
என்னும் கவிஞரின் கேள்வி காரசாரமானது . இரவியின் படைப்பு ஆளுமையில் நகைச்சுவை என்னும் மெல்லிய பூங்காற்றும் அவ்வப்போது களிநடனம் புரிந்து நிற்கக் காண்கிறோம் .ஓர் எடுத்துக்காட்டு.
சுனாமி வருவதாக
மருமகள்கள் பேச்சு
மாமியார் வருகை (இதயத்தில் ஹைக்கூ ப 21 )
தமிழ்நாட்டுக்கே உரிய -அதுவும் தமிழ்நாட்டு பெண்களிடமே சிறப்பாகக் காணப் படுகின்ற மாமியார் -மருமகள் உறவை மையமாகக் கொண்டு இங்கே நகைச்சுவை ததும்பி நிற்கும் ஹைக்கூ படைத்துள்ளார் கவிஞர் . கவிக்கோ அப்துல் ரகுமான் தொடங்கி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வரையில் படைப்பாளிகள் பலரும் ஹைக்கூ பற்றிய தங்கள் வரைவிலக்கணங்களைச் சுருக்கமாகவும் ,செறிவாகவும் வகுத்து தந்துள்ளனர் இரவியும் தம் பங்கிற்கு.
மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ (மனதில் ஹைக்கூ ப 11)
என ஹைக்கூ குறித்துப் புனைந்துள்ளார் .கணினி யுகத்தின் கற்கண்டு ,தற்கால இலக்கியத்தின் தகதகப்பு ,உருவத்தில் கடுகு , உணர்வில் இமயம் ,படித்தால் பரவசம் ,உணர்ந்தால் பழரசம் ,சொற்சிக்கனம் -தேவை இக்கணம் என்னும் அழகிய தொடர்களால் ஹைக்கூ கவிதைக்குப் புகழாரம் சுட்டியுள்ளார் . ஹைக்கூ என்றதும் இலக்கிய ஆர்வலர்களின் நினைவுக்கு வரும் கவிஞர்களில் ஒருவராக இரவி விளங்குகிறார் .ஹைக்கூ திலகம் என்றும் அவர் சிறப்பிக்கப் பெறுகின்றார் .இதுவரை பத்து நூல்களைப் படைத்துத் தந்துள்ள கவிஞர் இரா .இரவி எதிர்காலத்தில் இன்னும் பல நூல்களை வெளியிட்டு எழுத்துத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் .வாழும் படைப்பாளி ஒருவரை வாழும் காலத்திலேயே தாய் மனத்தோடு பாராட்ட முன் வந்து இருக்கும் பொதிகை மின்னல் இதழுக்கு தமிழ் கூறு நல்லுலகின் நெஞ்சார்ந்த பாராட்டும் வாழ்த்தும் வணக்கமும் உரியனவாகுக !
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்
சிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை
கோடிகள் கொள்ளை
அடித்தாலும் முடிவு
தற்கொலை கொலை
பொம்மை உடைந்த போது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு
தடியால் அடித்து
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான்
அனைவரும் விரும்புவது
அதிகாரம் அல்ல
அன்பு
நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்
கால்களைத் தொட்டு
வணங்கிச் சென்றன
அலைகள்
சிற்பி இல்லை
சிற்பம் உண்டு
நிலையானது எது ?
போட்டியில் வென்றது
புற அழகை
அக அழகு
நான் கடவுள் என்பவன்
மனிதன் அல்ல
விலங்கு
அவளுக்கும் உண்டு
மனசு மதித்திடு
மனைவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பார்க்காதவர்கள் பாருங்கள்
தேவதை
என்னவள்
நடந்து சென்றாள்
கடந்து சென்றாள்
கடத்திச்சென்றாள்
சக்தியில்
மின்சாரத்தை வென்றது
அவள் கண்சாரம்
வேண்டாம் வண்ணம்
இயற்கையாகவே சிகப்பு
அவள் இதழ்கள்
உச்சரிப்பை விட
அசைவே அழகு
அவள் இதழ்கள்
செவிகளை விட
விழிகளுக்கு இன்பம்
அவள்
ஆயிரம்
அர்த்தம் உண்டு
மவுனத்திற்கு
வருகிறது
பெரு மூச்சு
அவளை நினைத்தாலே
இன்று நினைத்தாலும்
மனதில் மகிழ்ச்சி
அவள் புன்னகை
கால்தடம் அழித்தது
கடல் அலை
உள்ளத்தின் தடம் ?
முகம் சிரித்தாலும்
அகம் அழுகின்றது
காதல் தோல்வி
சோகமான முடிவுகள்
சுகமான சுமைகள்
காதல் தோல்வி
அருமை அறியாதவனிடம்
அகப்பட்டால்
வீணையும் விறகுதான்
நடிகர்களின் ஆசை
நடிகைகளையும் தொற்றியது
வாரிசு அறிமுகம்
ஒரே வரிசையில்
தமிழ் அறிஞர்களும், ஆபாச நடிகைகளும்
கலைமாமணி பட்டமளிப்பில்
வில் அம்பு
விளம்பரமோ ?
அவள் விழிகள்
இன்றும் காணலாம்
டைனோசர்கள்
அரசியல்வாதிகள்
சுருங்கச்சொல்லி
விளங்கவைத்தல்
ஹைக்கூ
வாடிக்கையானது
காக்காக் குளியல்
பெரு நகரங்களில்
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
ஒழியவில்லை வறுமை
உலகெலாம் பரவியது
தேமதுரத் தமிழோசை அல்ல
ஊழல் ஓசை
பெருகப் பெருக
பெருகுது வன்முறை
மக்கள்தொகை
பலதாரம் முடித்தவர்
பண்பாட்டுப் பேச்சு
ஒருவனுக்கு ஒருத்தி
சிலைகளில் தெரிந்தது
ஆடை அணிகலனும்
சிற்பியின் சிறப்பும்
கூட்டம் கூடுவதில்லை
இலக்கிய விழாக்களுக்கு
தொலைகாட்சிகளால்
நிஜத்தை வென்றது நிழல்
நாடகத்தை வென்றது
திரைப்படம்
அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
காணிக்கைக் கேட்காத
கண் கண்ட கடவுள்
அம்மா
நடமாடும்
தெய்வம்
அம்மா
கருவறை உள்ள
கடவுள்
அம்மா
உயிர் தந்த உயிர்
உயிர் வளர்த்த உயிர்
அம்மா
மனதில் அழியாத ஓவியம்
மறக்க முடியாத காவியம்
அம்மா
ஆடுகளும் மாடுகளும் கூட
உச்சரிக்கும் உயர்ந்த சொல்
அம்மா
வாய் பேசாத ஜீவன்களும்
பேசிடும் ஒரே சொல்
அம்மா
மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
உருகிடும் மெழுகு
அம்மா
உச்சங்களின் உச்சம்
உலகின் உச்சம்
அம்மா
அன்பின் சின்னம்
அமைதியின் திரு உருவம்
அம்மா
திசைக் காட்டும்
கலங்கரை விளக்கம்
அம்மா
கரை சேர்க்கும் தோணி
உயர்த்திடும் ஏணி
அம்மா
நேசம் பாசம் மிக்கவள்
வேசம் அறியாதவள்
அம்மா
—
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
தென்னைமரம் தேங்காய்
பனைமரம் நுங்கு
உழைக்காத மனிதன் ?
அகராதியில் இல்லாத சொல்
அடிக்கடிப் பயன்படுத்தும் சொல்
சும்மா
திரைஅரங்கின் பெயரால்
ஆபாசம் மறைத்தார்
சுவரொட்டி
காந்தியடிகள் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்
ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்
கொண்ட கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்
திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்
சுட்ட கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்
உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்
வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்
நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள்
அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள்
வெள்ளையரின்
சிம்ம சொப்பனம்
காந்தியடிகள்
மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள்
அமைதியின் சின்னம்
அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள்
அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள்
மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள்
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கண் தானம் ஹைக்கூ
கவிஞர் இரா. இரவி, மதுரை
இறந்த பின்னும்
இருவருக்குப் பயன்படுமே
விழிக்கொடை
மண்ணுக்கும் தீக்கும்
இரையாகும் விழிகளை
மனிதனுக்கு வழங்குகள்
இறந்த பின்னும்
இவ்வுலகை இரசிக்க
கண் தானம்
ரசித்துப் பார்த்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை
குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்
வேண்டாம் மூடநம்பிக்கை
வேண்டும் தன்னம்பிக்கை
வெற்றி உன் கை
பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைப்பு
ஊடகங்கள்
தாய் கவிஞர் இரா .இரவி
தன்னலம் கருதாது சேய் நலம் கருதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்
தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்
தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்
முடியும் மெய்யான மெய் தாய்
எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்
உடலில் உயிர் உள்ளவரை என்றும்
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்
மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை
மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்
உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை
உலகில் யாரை மறந்தாலும் மகன்களே
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்
அன்னை கவிஞர் இரா .இரவி
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள்
அன்னையைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்
தாய் நாடு என்றுதான் அன்றே சொன்னார்கள்
தந்தை நாடு என்று எங்கும் சொல்வதில்லை
தாய் மொழி என்றுதான் எங்கும் சொல்கிறார்கள்
தந்தை மொழி என்று எங்குமே சொல்வதில்லை
நூலைப் போல சேலை தாயைப்போல பிள்ளை
தாயால் சிறந்தோர் தரணியில் மிகுந்தோர்
மாமனிதர் அப்துல் கலாம் முதல்
மண்ணில் பிறப்போர் சிறக்க காரணம் அன்னை
அன்பை விதைக்கும் அன்புச் சின்னம் அன்னை
அகிலம் போற்றிடும் அற்புத உறவு அன்னை
அன்னை இன்றி யாரும்பிறப்பதில்லை உலகில்
அன்னைக்கு இணையான உறவு இல்லை உலகில்
தாயுக்குத் தலை வணங்கினால் உலகம்
தலை வணங்கும் உன்னிடம்
—
—
தேர்தல் முடிவு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஈழத்தில் மரித்த உயிர்கள்
பழித் தீர்த்தன
தேர்தல் முடிவு
அதிக ஆட்டம்
அழிவுக்கு வழிவகுக்கும்
தேர்தல் முடிவு
நாட்டை இருட்டாக்கியவர்களை
நாடு இருட்டாக்கியது
தேர்தல் முடிவு
பேராசை
பெரும் நஷ்டம்
தேர்தல் முடிவு
உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய்
தேர்தல் முடிவு
அதீத நம்பிக்கை
ஆபத்தில் முடியும்
தேர்தல் முடிவு
சுனாமியை வென்றது
எதிர்ப்பு அலை
தேர்தல் முடிவு
கோடிகள் இரைத்தும்
முடிவு சோகம்
தேர்தல் முடிவு
குடிமகன்கள் மட்டுமல்ல
குடி மகன்களும் கைவிட்டனர்
தேர்தல் முடிவு
பொது மக்களின்
மவுனப் புரட்சி
தேர்தல் முடிவு
மனிதநேயம் மறந்ததால்
கிடைத்தத் தண்டனை
தேர்தல் முடிவு
இன நலம் பேணாததனால்
பெற்ற த் தண்டனை
தேர்தல் முடிவு
சேரக் கூடாதவர்களுடன்
சேர்ந்ததால் வந்தது
தேர்தல் முடிவு
—
—
https://anbudan.googlegroups.com/attach/4780b3fcc86b5fd2/era.JPG?view=1&part=4
நூல் அறிமுகம்
நூல் : மனதில் ஹைக்கூ
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : ஜெயசித்ரா
7எ, இருளப்பக் (கோனார்) சந்து,
வடக்கு மாசி வீதி, மதுரை – 625 001.
பக்கங்கள் : 64 விலை: ரூ 40
நடைமுறை வாழ்க்கையில் காணுகின்ற காட்சிகளைக் கருத்தோவியமாய் – ஹைக்கூவாய் ஒளிரச் செய்துள்ளார் கவிஞர். சூழல், சமுதாயச் சிந்தனை, நிருவாகக் கோளாறு…. என்று வாழ்க்கை யின் ஒவ்வொரு அங்கமும் அலசி ஆராயப் பட்டுள்ளது.
விளைவித்தன கேடு/கண்களுக்கும் மனதிற்கும்/தொ(ல்)லைக்காட்சிகள், யாரும் பார்க்கவில்லை கடவுளை / எல்லோரும் பார்க்கின்ற சாத்தான்/தொ(ல்) லைக்காட்சி என்று சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் அடக்கி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிபற்றிய வரிகள் மக்களைச் சிந்திக்க வைப்பன.
ஜோதிடம் என்ற போர்வை மக்களை மூடநம்பிக்கையினுள் மூழ்கடித்திருப்பதை, எதிர்காலம் அறிவதாக / நிகழ்காலம் வீணடிப்பு/சோதிடம், மடக்கட்டங்கள் கணித்து/ மனக்கட்டடங்கள்தகர்ப்பு/ சோதிடம் என்று குமுறியுள்ளார் கவிஞர்.
படிக்காவிட்டாலும்/ பாடமாகுங்கள் மருத்துவ மனைக்கு/ உடல்தானம், விழி இழந்தவருக்கு / விழி ஆகுங்கள் / ஒளி ஏற்றுங்கள் என்று சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திட்டுள்ளார்.
பரபரப்பான உலகில் பெற்றோரின் மீது பிள்ளைகள் காட்டும் வெறுப்பினை, குஞ்சுகள் மிதித்து/ கோழிகள் காயம்/ முதியோர் இல்லம் என்ற புதுமொழி படைத்து துணுக்குற வைத்துள்ளார்.
மொத்தத்தில், மனதின் உள்ளக் குமுறல்களை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் முத்திரை பதித்து படிப்போர் மனதினைத் தென்றலாகத் தீண்டி மகிழ்ச்சியுற வைப்பதே மனதில் ஹைக்கூ
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்
கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…
மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்…
உயிரற்ற பொருளையும்
தாக்கியது வைரஸ்
கணினி
ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
முகம் பார்க்க வேண்டும்
என்னவளே உன்
முகத்தைக் காட்டு….
மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ
வண்ணம் மாற வில்லை
மழையில் நனைந்தும்
வண்ணத்துப்பூச்சி
வண்ணம் மாறியது
கட்சி தாவியது
அந்தி வானம்
கோடை மழை
குதூகலப் பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்.
சாலையில் கவனம்
வழியில் மரணக்குழி
செய்தியாகி விடுவாய்
சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்
தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்
ஏக்கத்தில் குழந்தை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்.
ஆயத்தம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
பிறரின் உழைப்பில்
பிரகாசிக்கும் சோம்பேறி
முதலாளி
பறிக்க மனமில்லை
அழகாய் மலர்ந்தும்
விதைத்தது அவள்
பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உடன் நிறுத்தியது
குழந்தையின் அழுகையை
பொம்மை
விசமாக இருந்தாலும்
அழகுதான்
அரளிப் பூவும்
கூறியது
வரலாறு
குட்டிச்சுவரு
உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல்
பிரிவினை விரும்பாதவள்
இணைந்தே இருக்கும்
இரு புருவமும்
பட்டப் பகலில்
கூவியது சேவல்
கணினிப் பொறியாலனுக்கு
இங்கு பெய்த மழை
அங்கு பெய்யவில்லை
இயற்கையின் அதிசயம்
அசிங்கம்தான்
அனைவருக்கும்
அந்தரங்கம்
உருப்படியான
ஒரே திட்டம்
நான்கு வழிச் சாலை
அனுமதிக்கவில்லை
ஊருக்குள்
காவல் அய்யனாரை
வருமானத்தைவிட
கழிவால் தீங்கு அதிகம்
ஆலைகள்
அழகைக் கூட்டியது
காதோரம் பறந்த
சிகை
இடித்த பின்னும்
பயன்பட்டது வீடு
நிலை சன்னல்
ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
காவிரி போல
அரசியலானது
கல்வி
இனிமையானது
உற்றுக்கேளுங்கள்
ஓடும் நதியின் ஓசை
பெண்ணைவிட
ஆணே அழகு
மயில்
முடிந்தது சந்திப்பு
தொடர்ந்தது அதிர்வு
நினைவலைகள்
பிரித்தது இலைகளை
மரத்திலிருந்து
காற்று
குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை
உண்மையை விட
போலிகள் பொலிவாக
செயற்கைச் செடிகள்
கோலத்தை விட
கோலமிட்டவள்
கொள்ளை அழகு
தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்
சம்மதித்தனர்
வரதட்சணைக் குறைக்க
சொத்து வரும் என்பதால்
வா வை விட
ஏ பொருந்தும்
வேலை வாய்ப்பு அலுவலகம்
வருட வருமானம் லட்சத்தில் அன்று
மாத வருமானம் லட்சத்தில் இன்று
நிம்மதி ?
பலன் இல்லை
பெயர் மாற்றுவதால்
எண்ணம் மாற்று
பலவீனம்
பறை சாற்றுதல்
சோதிடம் பார்த்தல்
மாதா பிதா
குரு
மனைவி
கோபத்தைக் குறைக்கும்
இதயத்தை இதமாக்கும்
இலக்கியம்
முக்காலமும் வாழ்பவர்
எக்காலமும் வாழ்பவர்
திருவள்ளுவர்
தமிழ் என்ற சொல்லின்றி
தமிழுக்கு மகுடம் சூட்டியவர்
திருவள்ளுவர்
தமிழன் என்ற சொல்லின்றி
தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவர்
திருவள்ளுவர்
உலகின் முதல்மொழி
மொழிகளின் தாய்மொழி
தமிழ்
இலக்கண இலக்கியங்களின்
இனிய சுரங்கம்
தமிழ்
யுகங்கள் கடந்தும்
இளமை குன்றாதது
தமிழ்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்
கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…
மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்…
உயிரற்ற பொருளையும்
தாக்கியது வைரஸ்
கணினி
ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
முகம் பார்க்க வேண்டும்
என்னவளே உன்
முகத்தைக் காட்டு….
மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ
வண்ணம் மாற வில்லை
மழையில் நனைந்தும்
வண்ணத்துப்பூச்சி
வண்ணம் மாறியது
கட்சி தாவியது
அந்தி வானம்
கோடை மழை
குதூகலப் பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்.
சாலையில் கவனம்
வழியில் மரணக்குழி
செய்தியாகி விடுவாய்
சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்
தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்
ஏக்கத்தில் குழந்தை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்.
ஆயத்தம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
பிறரின் உழைப்பில்
பிரகாசிக்கும்
சோம்பேறி முதலாளி
பறிக்க மனமில்லை
அழகாய் மலர்ந்தும்
விதைத்தது அவள்
பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்
நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்
சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி
காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்
ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு
நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்
வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்
ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
கோடிகளும் லட்சங்களும்
கோயிலின் உள்
வெளியே பிச்சைக்காரர்கள்
தமிழர்களின் நெஞ்சில்
நீரு பூத்த நெருப்பு
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்
அன்று கர்மவீரர் காமராசருக்கு
இன்று சாராய வியாபாரிகளுக்கு
கல்வி வள்ளல் பட்டம்
இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி
அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வ
முனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ
திருவேங்கடம் என்பது இயற்பெயர்
தாத்தாவின் பெயரான வரதராசன் நிலைத்த் பெயர்
எழுத்தராகப் பணித் தொடங்கி உயர்ந்த
துணைவேந்தராகப் பணி முடித்த முதல்வர்
எழுத்தர் ஆசிரியர் விரிவுரையாளர் துணைப் பேராசிரியர்
துறைத் தலைவர் துணைவேந்தர் படிப்படியாக உயர்ந்தவர்
இழப்பைக் கண்டு என்றுமே வருந்தாதவர்
உழைப்பின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அன்றே
செந்தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நன்றே
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
உலக நாடுகள் பல கண்ட தமிழ் அறிஞர்
இந்திய மொழிகள் பல அறிந்த பண்டிதர்
இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில்
இனிய நட்பும் தொடர்பும் கொண்டவல்லவர்
பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில்
பண்பான உதவிகள் புரிந்த நல்லவர்
சிறுகதை நாவல் கட்டுரை என இவர்
செதுக்கியதில் ஈடு இணையற்ற இலக்கிய சிற்பி
மனதில் பூத்த கருத்துக்களைத் தொகுத்து
முதல் நாவலாக செந்தாமரை தந்த எழுத்தாளர்
கள்ளோ காவியமோ இரண்டாம் நாவல் மூலம்
கள்வரென அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்
புன்னகை அணிந்திருக்கும் பூ முகம் பெற்றவர்
புத்திக் கூர்மையால் சுடர் முகம் கொண்டவர்
அறுபத்தி இரண்டு வயதில் காலத்தால் அழியாத
எண்பத்தி அய்ந்து நூல்கள் எழுதிய சகலகலா வல்லவர்
மாநிலத்தில் முதல் மாணவனாகப் புலவர் பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் நூற்றாண்டு கடந்தும் நின்றவர்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர்
இரா .இரவி
கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்
கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர்
நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்
நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர்
புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர்
போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர்
தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர்
தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார்
டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக
சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர்
காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும்
காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர்
தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர்
பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர்
குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து
குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர்
கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு
கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர்
இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர்
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றானவர் தாகூர்
குழந்தைப் பருவத்தில் பள்ளியைச் சிறையாக நினைத்தவர்
குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் குரல் தந்தவர்
மாலைப் பாடல்கள் எனும் முதல் நூலின் மூலம்
மலை என கவிதை மாமலை என உயர்ந்த கவிஞர் தாகூர்
வங்கத்து நாவல் எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியிடம்
வாழ்த்தும் பாராட்டு மழையும் மலர் மாலையும் பெற்றவர்
ஆடம்பரத்தை என்றும் விரும்பாத எளிமையின் சின்னம்
அன்பு நெறியை அகிலத்திற்கு உணர்த்திய நல் அன்னம்
தாய்மொழிப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தவர் தாகூர்
ஆங்கில மோகம் அகற்றுக அன்றே உரைத்தவர் தாகூர்
சிலை வழிபாடு வேண்டாம் என்று சொன்னவர் தாகூர்
சக மதங்களைச் சாடுவது தவறு கூறியவர் தாகூர்
விலங்குகள் பறவைகள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதீர்
வனங்களையும் மரங்களையும் ரசிக்க வைத்தவர் தாகூர்
பிற நாட்டின் மீது பகை வளர்க்கும் தேசபக்தி
பிற்போக்குத்தனமானது என்று சாடியவர் தாகூர்
மூடப் பழக்கங்களை வெறுத்துப் பகுத்தறிவை நாடியவர்
மூச்சாகத் தாய் மொழியை நேசிக்கச் செய்தவர்
ஆங்கிலம் இத்தாலி எனப் பன்னாட்டு மொழிகளில்
அகிலம் முழுவதும் பரவியது தாகூரின் படைப்பு
அயல்நாடுகளில் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால்
அற்புதக் கவிஞர் தாகூர் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்றனர்
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் தாகூர்
—
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ
பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ
நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ
கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ
அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ
ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ
தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ
போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ
முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ
வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ
பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ
உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிபோரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று
இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை
செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மெய்ப்பித்தனர்
பேராசை பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்
கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்
அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை
பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு
காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை
கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை
இனி சேர்ந்து வாழவே முடியாது கவிஞர் இரா. இரவி
கீரியும் பாம்பும் சேர்ந்து வாழ முடியாது .
ஆடும் புலியும் சேர்ந்து வாழ முடியாது
எலியும் பூனையும் சேர்ந்து வாழ முடியாது
கன்றும் பன்றியும் சேர்ந்து வாழ முடியாது
மானும் சிங்கமும் சேர்ந்து வாழ முடியாது
பூச்சியும் பல்லியும் சேர்ந்து வாழ முடியாது
சேனல் 4 பார்த்த பின் இனி சேர்ந்து வாழவே முடியாது
சேர்ந்து வாழச் சொல்வது மடத் தனமானது
தமிழரும் சிங்களரும் இனி சேர்ந்து வாழவே முடியாது
தனித் தனியே வாழ்வதுதான் இருவருக்கும் நல்லது
காட்டுமிராண்டிகளை விட மோசமான சிங்கள ராணுவம்
விலங்குகளைவிட கொடூரமான இலங்கை ராணுவம்
அன்பை போதித்த புத்தரை வணங்கும் சிங்களருக்கு
அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர் அன்று ‘
சிங்களரின் பேராசையே இலங்கையின் அழிவுக்குக் காரணமானது
சிங்களரில் நல்லவர்கள் மிக மிகக் குறைவு
தமிழர்களில் கெட்டவர்கள் மிக மிகக் குறைவு
சந்திரிகாவின் மகன் போன்ற ஒரு சில சிங்களரே
சக மனிதன் துன்பம் புரிந்து அழுகின்றனர்
இம் என்றால் சிறை ஏன்? என்றால் கொலை
எப்படி ?இனி இணைந்து வாழ முடியும்
சேனல் 4 பார்த்த பின் இனி சேர்ந்து வாழவே முடியாது
சேர்ந்து வாழச் சொல்வது மடத் தனமானது
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ
பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ
நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ
கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ
அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ
ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ
தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ
போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ
முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ
வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ
பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ
உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிபோரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று
இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை
செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ
—
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அரசியல்வாதிகளின்
கால் பந்தானது
கல்வி
வேதனையில்
தமிழ் அன்னை
தமிங்கிலம்
பறவையின் எச்சத்தால்
வளர்ந்தது உச்சம்
மரம்
உழவனுக்கு
உதவமுடியா மண்புழு
பாலித்தீன் பைகள்
மரத்தை வெட்டி
எரித்த விறகு
அழவைத்தது
அவமானச்சின்னங்கள்
இந்தியாவிற்கு
முதியோர் இல்லங்கள்
காண முடியவில்லை
குருவிக்கூடு
குருவி
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி
நேற்று கொசாவா
இன்று தெற்கு சூடான்
நாளை தமிழீழம்
சேனல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்
மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தி வந்தனர் .அற வழியில் போராடினார்கள் நியாயம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள் .
தெற்குபூடான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான் .அடக்குமுறைக்கு எதிராகவேப் போராடினார்கள் .போராட்டத்தில் இருவருமே பல போராளிகளை இழந்தார்கள் .பல அப்பாவி பொதுமக்களையும் இழந்தார்கள் .ஐநா மன்றம் தெற்கு பூடான் விடுதலைக்கு முன் நின்று வாங்கித் தந்தது. .அது போல ஈழத்திலும் விடுதலையை ஐநா முன் நின்று வாங்கித் தர வேண்டும் .உலகத் தமிழர்கள் அனைவரின் கோரிக்கை இனி இதுதான் . இலங்கையை இரண்டாகப் பிரிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும் .இனி சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது .அதை உலக சமுதாயம் உணர் வேண்டும் சம உரிமை ,தனி மாநிலம் இவை எல்லாம் வெட்டிப் பேச்சு . . விடுதலைப்புலிகள் வான்படை, கடல்படை ,கடவுச்சீட்டு, அரசாட்சி என உலகம் வியக்கும் வண்ணம் நடத்தி வந்தனர் . விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் சிங்களப் பொது மக்களை தாக்கியது இல்லை .தாக்க நினைதத்தும் இல்லை .தாக்க நினைத்து இருந்தால் இன்று இலங்கையில் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருந்து இருக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகள் போர் நெறி கடைபிடித்து வந்தனர் .ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது.
இலங்கை ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதற்கு இலங்கை ராணுவ வீரர் சாட்சி உள்ளதை சேனல் 4 காட்டி உள்ளது இப்படிப்பட்ட கொடியவர்களுடன் சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?சிந்திப்பீர் .இலங்கை ராணுவம் இந்தியா, சீனா ,இஸ்ரேல் உள்ளிட்ட பன்னாட்டு ராணுவ உதவியுடன் ,ராடார் கருவிகளுடன் ,.செயற்கை கோள் உதவிகளுடன் தமிழ் இனத்தையே பெண்கள் , குழந்தை, முதியவர் என்று பாராமல் தடை செய்ப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி ,பாலியல் வல்லுறவு செய்து உயிரோடு மண்ணில் புதைத்து ,காட்டுமிராண்டிகளைவிட மோசமாக விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டவர்களுடன் இனி சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?.
இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .தமிழரை வெளிஉறவு அமைச்சராக ,செயலராக நியமிக்க வேண்டும் இந்தியா இனியாவது தமிழர்களின் இன உணர்விற்கு மதிப்பு அளித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் .மனித நேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் அதைதான் எதிர் பார்க்கின்றோம் .உலகில் சில ஆண்டுகளுக்கு முன் 50 நாடுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இன்று 193 நாடுகள் உள்ளது .ஐநா மன்றத்தில் 193 கொடிகள் பறக்கின்றன.194 வது கொடியாக தமிழ் ஈழக் கோடி பறக்க உதவ வேண்டும் .உலகத்தமிழர்கள் யாவரும் இன்று ஒரே குரலில் ஈழத்தில் தனி நாடு அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் .முடிந்தால் உதவுங்கள் .முடியாவிட்டில் தள்ளி நில்லுங்கள் .ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மெய்ப்பித்தனர்
பேராசைப் பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்
கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்
அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை
பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு
காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை
கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை
—
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மூளைச்சலவையால்
மூளை இழந்தவர்கள்
தீவிரவாதிகள்
விலங்குகளை விடக்
கீழானவர்கள்
தீவிரவாதிகள்
உயிர்களை அழிக்கும்
கொடூரன்களே
உருவாக்க முடியுமா ?
மதி இழந்ததால்
மதச் சார்பற்ற நாட்டில்
மதக்கொலைகள்
அறிவிழந்த
மத வெறியால்
அப்பாவி மக்கள் பலி
வாழ்ந்தவர்களை விட
வீழ்ந்தவர்களே அதிகம்
மதத்தால்
மதம் அபீன் என்றார் லெனின்
மதம் புரட்டு என்றார் பெரியார்
மெய்யானது இன்று
மரம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
திருமணத்திற்கு வாழை
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு
தொட்டில் முதல்
சுடுகாடு வரை
மரம்
வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால் விறகு
மரம்
வெட்டும் வில்லனுக்கும்
நிழல் தந்தது
மரம்
இயற்கையின் விசித்திரம்
சிறிய விதை
பெரிய விருட்சமானது ‘
– ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
இயற்கை எழுதிய கவிதையில்
எழுத்துப்பிழைகள்
திருநங்கைகள்
உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு
வக்கிரம் வளர்க்கும்
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில்
அன்று இலங்கை கொடூரனுக்கு
இன்று இந்திய வில்லிக்கு
புற்றுநோய்
ஆணி அடித்து
ரணப்படுத்தி விளம்பரம்
சாலையோர மரங்களில்
படமே இல்லை
உதவியது விளம்பரம்
முன்னாள் நடிகைக்கு
புகைப் பிடிக்கின்றதோ ?
மலை
வான் மேகம்
கண்ணால்
காண்பதும் பொய்
மலையை முத்தமிடும் வானம்
ஒழித்து விடு
பொன்னாசை பட்டாசை
நிரந்தரம் நிம்மதி
விரயமாவதைப் பயன்படுத்திடு
விவேகமாக வளரந்திடு
சூரிய சக்தி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பாமரர்கள் மட்டுமல்ல
படித்தவர்களிடமும் பெருகியது
மூடநம்பிக்கை
இரண்டும் ஒழிந்தால்
வல்லரசாகும் இந்தியா
சாமியார் சாமி
கணினி யுகத்தில்
கற்கால நம்பிக்கை
பிரசன்னம் பார்த்தல்
முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையாக்கும்
சுற்றுலா
வாழ்க்கை முரண்பாடு
பணக்காரர்களுக்கு பசி இல்லை
ஏழைகளுக்கு பசி தொல்லை
அறிந்திடுங்கள்
சோம்பேறிகளின் உளறல்
முடியாது நடக்காது தெரியாது
சாதிக்கின்றனர்
கைகள் இல்லாமலும்
கைகள் உள்ள நீ ?
வாழ்க்கை இனிக்கும்
கொடுத்ததை மறந்திடு
பெற்றதை மறக்காதிரு
கவனம் தேவை
சிக்கல் இல்லை
சிந்தித்துப் பேசினால்
விரல்களால் தெரிந்தது
விழிகளில் உலகம்
இணையம்
கையில் வெண்ணை
நெய்யுக்கு அலைகின்றனர்
கோவில்களில் தங்கம்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இந்திய அரசியல் சட்டத்தை முதன் முதலாக சமுக நீதியான இட ஒதிக்கீட்டுக்காக, திருத்த வைத்த வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் பிறந்த தமிழகத்தில், இட ஒதிக்கீட்டுக்கு எதிரான ஆராக்சன் என்ற இந்திப் படம் தடை செய்யப்பட வேண்டும் .உ பி ,ஆந்திர மாநிலங்களில் தடை செய்யப்பட்ட ஆராக்சன் என்ற இந்திப் படம் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தடை செய்யப்பட வேண்டும் .சமுக நீதியான இட ஒதிக்கீட்டுக்கு எதிராக இனி யாரும் சிந்திக்கவே கூ டாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்
வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி
சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான் கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்
தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்
நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்
மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்
கடல் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின்
கைகளில் இருப்பது துப்பாக்கியா ?பூச்சென்டா
பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் இந்தியா
பக்கத்துஇலங்கையிடம் வீரம் காட்டாதது ஏன்?
தமிழருக்காக என்றாவது இந்திய ராணுவம்
தட்டிக் கேட்டதுண்டா ?இலங்கை ராணுவத்தை
ஏன்?என்று கேட்க நாதி இல்லை
இந்தியனாகத் தெரியவில்லை தமிழன்
தமிழனின் உயிரை மதிக்காத இந்தியாவை
தமிழன் மதிக்க மனம் வருமா ?
விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களைவிட
விவேகமானது தமிழ் மக்களின் உயிர் காப்பது
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்
கலைஞர் தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்
ஜெயா தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்
பட்டிமன்றத்தில் கவிஞர் இரா .இரவி உரை
அணு உலை ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அறிவியலின்
ஆபத்து
அணுஉலை
அரிசி உலை உயிர் வளர்க்கும்
அணு உலை உயிர்களைப்
பறிக்கும்
அதனைத் தொலை
உயிருக்கு உலை
அணு உலை
நன்மையை விட
தீமையே அதிகம்
அணு உலை
கூட்டமாகக் கொல்லும்
கொடிய வில்லன்
கூடங்குளம் அணு உலை
பற்றி எரிந்தால்
அணைக்கவே முடியாது
அணுஉலை
கொள்ளியால்
தலைச் சொரிதல்
அணுஉலை
ஆதாயத்தை விட
ஆபத்தும் அழிவும் அதிகம்
அணுஉலை
உயிர் இனங்களை மட்டுமல்ல
புல் பூண்டுகளை அழிக்கும்
அணுஉலை
அயல்நாடுகளில்
அங்கீகரிக்கவில்லை
அணுஉலை
அக்கம் பக்கம்
அழிவு நிச்சியம்
அணுஉலை
வேண்டாம் வேண்டாம்
கூடங்குளம்
ரத்தக்குளமாகிட
உலை வைக்காமல்
உண்ணாவிரதம்
அணுஉலை மூட
ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு வேண்டாம்
மூடுக அணுஉலை
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
எய்ட்ஸ் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
பண்பாடுப் பயிற்றுவிக்கும்
பயமுறுத்தல் நோய்
எய்ட்ஸ்
ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
வராது எய்ட்ஸ்
மருந்து இல்லை
மரணம் உறுதி
எய்ட்ஸ்
உயிரை உருக்கும்
உடலைக் கெடுக்கும்
எய்ட்ஸ்
கவனம் தேவை
குருதி பெறுகையில்
எய்ட்ஸ்
எச்சரிக்கை
ஊசி போடுகையில்
எய்ட்ஸ்
வரும் முன் காப்போம்
உயிர்க் கொல்லிநோய்
உணர்ந்திடுவோம்
சபலத்தின் சம்பளம்
சலனத்தின் தண்டனை
எய்ட்ஸ்
சில நிமிட மகிழ்வால்
பல வருடங்கள் இழப்பு
எய்ட்ஸ்
வெறுக்க வேண்டாம்
நேசிப்போம் நண்பராக
எய்ட்ஸ் நோயாளிகளை
—
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ (சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
உண்டு காப்பீடு
ஆடு மாடு வயல்களுக்கு
இல்லை திருநங்கைகளுக்கு !
முரண் வடஇந்தியாவில் ராசி
தென்இந்தியாவில் ராசியன்று
திருநங்கைகள் !
.
ஆண்களும் ஏற்பதில்லை
பெண்களும் ஏற்பதில்லை
திருநங்கைகள் !
வாழ்க்கையில் போராட்டம் நமக்கு
வாழ்க்கையேப் போராட்டம்
திருநங்கைகள் !
வழி இல்லாத வாழ்க்கை
வலி மிகுந்த வாழ்க்கை
திருநங்கைகள் !
மூன்றாம் பால் அல்ல
முதல் பால்
திருநங்கைகள் !
வாய்ப்பு வழங்கினால்
வாகை சூடுவார்கள்
திருநங்கைகள் !
தவறே செய்யாமல்
தண்டனைப் பெற்றவர்கள்
திருநங்கைகள் !
குடும்பத்தில் எதிர்ப்பு
குமுகாயத்தில் புறக்கணிப்பு
திருநங்கைகள் !
தவறான பிம்பம் தகருங்கள்
மனிதாபிமானம் விதையுங்கள்
திருநங்கைகள் !
சகமனுசியாக மதியுங்கள்
சகோதரியாக நினையுங்கள்
திருநங்கைகள் !
கேலியாகப் பேசாதீர்கள்
தோழியாகப் பாருங்கள்
திருநங்கைகள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com
http://www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கேலிக்கூத்தானது
அகிம்சையின் ஆயுதம்
உண்ணாவிரதம்
எடுபடவில்லை
மோடியின் மோடி
மஸ்தான் வேலை
பிறக்கும் போது இல்லை
இறக்கும் போது உண்டு
ஆடை
யானையின் வாய்
அரசியல்வாதியின் கை
சென்றால் திரும்பாது
இதயம் அல்ல
மூளைதான்
காதலியின் இருப்பிடம்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி
உடலில் குறை இருந்தாலும்
உள்ளத்தில் குறைவற்றோர்
மாற்றுத்திறனாளிகள்
குறையைக் குறையை
நினைக்காதவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
வியக்கும் வண்ணம்
விந்தைகள் புரிவோர்
மாற்றுத்திறனாளிகள்
புறப்பார்வை இல்லாவிட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
உடலுறுப்பை இழந்தபோதும்
தன்னம்பிக்கை இழக்காதவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
வாய்ப்பு வழங்கினால்
சிகரம் தொடுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
சாதனை புரிவதில்
சரித்திரம் படைப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
சளைத்தவர்கள் அல்ல
நிருபித்துக் காட்டுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
முயற்சித் திருவினையாக்கும்
மெய்பித்துக் காட்டுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
இல்லை என்ற கவலை
என்றும் இல்லாதவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
விழிகளை இழந்தபோதும்
விரல்களை விழிகளாக்கியவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
குரலினைக் கேட்டே
யார் ?என்று உரைப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
சக மனிதராக நேசியுங்கள்
சங்கடப்படும்படிப் பார்க்காதீர்கள்
மாற்றுத்திறனாளிகளை
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அணு உலை உயிர்களுக்கு உலை கவிஞர் இரா .இரவி
நமக்கு நாமே
வைக்கும் அணுகுண்டு
அணு உலை
வராது பூகம்பம் சரி
வந்தால்
அணு உலை
கணிக்க முடியாதது
இயற்கையின் சீற்றம்
அணு உலை
கொலைக்களம் ஆக வேண்டாம்
கூடங்குளம்
அணு உலை
மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
உயிர்கள் போனால் கிடைக்குமா ?
அணு உலை
பண நட்டம் பெற்றிடலாம்
உயிர்கள் நட்டம் ?
அணு உலை
மின்சாரம் பெறப் பல வழி
உயிர்கள் போக வழி
அணு உலை
உயிர்கள் அவசியம்
மின்சாரம் அனாவசியம்
அணு உலை
வாழலாம் மின்சாரமின்றி
வாழமுடியுமா?உயிரின்றி
அணு உலை
உயிரா ? மின்சாரமா?
உயிரே முதன்மை
அணு உலை
வராது சுனாமி என்றவர்களே
வராமலா இருந்தது சுனாமி
அணு உலை
உத்திரவாதம் உண்டா ?
பூகம்பம் வரதா ?
அணு உலை
விரும்பவில்லை வெறுக்கின்றனர்
மனிதாபிமானிகள்
அணு உலை
வேண்டும் என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில்
—
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
பதவி ஊசலாடுகிறது
சிதம்பர ரகசியம்
பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ
தங்கக்கூண்டு வேண்டாம்
தங்க கூண்டு போதும்
காதலர்களுக்கு
இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்
மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்
இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை
ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை
காதல் உணர்வு
அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்
யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்
அன்று பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்
புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர்
—
நூல்:சுட்டும் விழி
ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி
மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
தமிழ்த்துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
சுட்டும்விழி எனும் நூல் கவிஞர் இரா.இரவியின் பதினொன்றாவது படைப்பு.பாங்கான படைப்புங்கூட.இலக்கியத்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் இந்நூலுக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை அடி முதல் முடிவரை புத்தகத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட அற்புத உரை.அட்டைப்பட வடிவமைப்பிற்கு எனத் தனியாக ஏதேனும் பரிசு அறிவிக்கப்படின், இந்த வருடத்திற்கான பரிசு சுட்டும்விழிக்குத்தான்.அறிவுப்பூர்வமாய் வடிவமைத்திருக்கும் அரிமா முத்து அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!சமூகச்சீர்கேடு,மது-மாசு கேடுகள்-என சூரியப் பார்வையினையும்,இயற்கை ரசனை,அதீத அன்பு- என சந்திரப் பார்வையினையும் சுட்டிக்காட்டுவதனால் மகாகவியின் பயன்பாட்டுச் சொற்றொடரான ‘சுட்டும் விழி’- எனும் தலைப்பு இந்நூலுக்கு பொருத்தமான ஒன்றே!
திறப்புவிழா!
புத்தகத்தைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே,அந்நியமொழியில் பேசுவதுதான் ஆடம்பரம் என்று தவறாக எண்ணி நடப்போர்க்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் ஒரு துளிப்பா!
“தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்!
அம்மா! (ப.1)
தமிழியல் உணர்வோடு தமிழின உணர்வு;சமூக இழிநிலையோடு அரசியல் இழிநிலை;தாயன்போடு தாரத்தின் அன்பு;மாசுக்கட்டுப்பாடு,நிதித்தட்டுபாடு,நீதித்தட்டுப்பாடு,பணம் படுத்தும் பாடு-என பல்வேறு பாடுகள் பக்கத்திற்குப் பக்கம் இடம்பிடிக்கின்றன.மூடத்தனத்தின் முதுகெலும்போ ஹைக்கூவின் மூன்றாம் வரியில் கவிஞரால் முறித்துஎறியப்படுகின்றது .இயற்கை அன்னை மீது கவி கொண்டிருக்கும் பாசமும் நேசமும் ஆங்காங்கே வெளிப்பட,தேசத்தலைவர்கள் இடையிடையே வந்துபோக,இத்தோடு இரா.இரவியின் அநுபவத்துளிகள் தேசியக்கொடியின் மூவர்ணமாய் நூல் முழுமையும் மிளிர்கின்றன.
கல்வெட்டும் சொல்வெட்டும்;
சொற்களை மாற்றிப்போட்டு சுவைபட ஹைக்கூ படைப்பது என்பது கவி இரவிக்கு கைவந்த கலை.
“வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்!” (ப.35)
தாம் போகின்றபோக்கில் பார்க்கின்ற காட்சியை துளிப்பாவாக உருமாற்றுவதில் வல்லவர் இவர்.இதோ ஒரு கண்ணீர்க் கவிதை!
“யாரும் வாங்காமலேயே
மலர்ந்தன பூக்கள்!
வாடினாள் பூக்காரி!(ப.33)
இலக்கிய நயமிக்க மின்பா ஒன்று !
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து! (ப.34)
ஊடல்-கூடல் என இரண்டினையும் ஒருங்கே சுட்டிக்காட்டும் ஒப்பீட்டுத் துளிப்பா இதோ!
புறத்தில் கோபம்!
அகத்தில் இன்பம்!
அவள் பலாப்பழம்!
முரண்சுவை மிக்க ஹைக்கூ;
கோடிகளும் இலட்சங்களும்
கோவிலின் உள்ளே!
வெளியே பிச்சைக்காரர்கள்!(ப.44)
நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ!
சிற்பி இல்லை!
சிற்பம் உண்டு!
எது நிலை? (ப.58)
இதனை வாசித்தபொழுது முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் இயற்கைச் சீற்றத்திற்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கும் ஐயன் வள்ளுவன் சிலையும் ,அச்சிலையை வடிவமைத்து செதுக்கிய சிற்பியான கணபதி ஸ்தபதி சமீபத்தில் இந்நிலவுலகினை விட்டு நீங்கியதும்தான் நினைவிற்கு வருகின்றது!
இதோ கல்வெட்டுக் கவிதை!
தமிழைக் காப்பதில்
பெரும்பங்கு வகித்தன!
பனைமரங்கள்!
என தாய்மொழிப்பற்றோடும் துளிப்பாக்கள் கவியால் படைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க ஒன்று!ஹைக்கூத்திலகம் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று, இலக்கிய உலகிற்கு பெரும்பணி ஆற்றிவரும் கவிஞர் இரா.இரவியின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி அவனி முழுதும் எட்ட என் போன்ற இலக்கிய வாசகர்களின் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
பதவி ஊசலாடுகிறது
சிதம்பர ரகசியம்
பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ
தங்கக்கூண்டு வேண்டாம்
தங்க கூண்டு போதும்
காதலர்களுக்கு
இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்
மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்
இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை
ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை
காதல் உணர்வு
அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்
யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்
அன்று பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்
புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கண்களுக்கு விருந்து
காட்சிப் பெட்டகம்
இயற்கை
உழைக்காத மலருக்கு
வியர்வையா ?
பனித்துளி
பூமியிலிருந்து வானம்
வானத்திலிருந்து பூமி
தண்ணீர் சுற்றுலா மழை
உச்சரிப்பைவிட
உயரந்தது
மௌனம்
ஒழியவேண்டும்
வரங்களுக்கான
தவம்
விரல்களின்றித்
தீண்டியது
தென்றல்
உற்றுக்கேளுங்கள்
பேசும்
மலர்
மரமும் கெட்டது
மனிதனைப் பார்த்து
கல்லானது
ஒரு வீட்டில் ஒரு நாளில்
இத்தனை பாலித்தீன்
நாட்டில் ?
யாருக்கு வாக்களிக்க
தேர்ந்து எடுக்க முடியவில்லை
குழப்பத்தில் மக்கள்
ருசிப்பதில் திகட்டலாம்
ரசிப்பதில் திகட்டுவதில்லை
அழகு
கிடைக்காததற்காக ஏங்குவது
கிடைத்ததை உணராதது
பலரின் வாழ்க்கை
கற்பனைதான்
கல்வெட்டானது
தேவதை
ஏழு வண்ணங்களில்
எண்ணம் கவரும் வில்
வானவில்
பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம்
நேற்றைய நவீனம்
இன்றைய நவீனமன்று
நாட்டு நடப்பு
நூல்:சுட்டும் விழி
ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி
மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
தமிழ்த்துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
சுட்டும்விழி எனும் நூல் கவிஞர்
இரா.இரவியின் பதினொன்றாவது
படைப்பு.பாங்கான படைப்புங்கூட.இலக்கியத்தேனீ
முனைவர் இரா.மோகன் அவர்கள்
இந்நூலுக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை அடி முதல் முடிவரை
புத்தகத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட அற்புத உரை.அட்டைப்பட
வடிவமைப்பிற்கு எனத் தனியாக ஏதேனும்
பரிசு அறிவிக்கப்படின், இந்த வருடத்திற்கான பரிசு
சுட்டும்விழிக்குத்தான்.அறிவுப்பூர்வமாய் வடிவமைத்திருக்கும் அரிமா முத்து அவர்களுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்!சமூகச்சீர்கேடு,மது-மாசு கேடுகள்-என சூரியப் பார்வையினையும்,இயற்கை ரசனை,அதீத
அன்பு- என சந்திரப் பார்வையினையும் சுட்டிக்காட்டுவதனால்
மகாகவியின் பயன்பாட்டுச் சொற்றொடரான ‘சுட்டும் விழி’- எனும் தலைப்பு
இந்நூலுக்கு பொருத்தமான ஒன்றே!
திறப்புவிழா!
புத்தகத்தைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே,அந்நியமொழியில்
பேசுவதுதான் ஆடம்பரம் என்று தவறாக எண்ணி
நடப்போர்க்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் ஒரு துளிப்பா!
“தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்!
அம்மா! (ப.1)
தமிழியல்
உணர்வோடு தமிழின உணர்வு;சமூக
இழிநிலையோடு அரசியல் இழிநிலை;தாயன்போடு
தாரத்தின் அன்பு;மாசுக்கட்டுப்பாடு,நிதித்தட்டுபாடு,நீதித்தட்டுப்பாடு,பணம் படுத்தும் பாடு-என பல்வேறு பாடுகள்
பக்கத்திற்குப் பக்கம் இடம்பிடிக்கின்றன.மூடத்தனத்தின்
முதுகெலும்போ ஹைக்கூவின் மூன்றாம் வரியில் கவிஞரால் முறித்துஎறியப்படுகின்றது
.இயற்கை அன்னை மீது கவி கொண்டிருக்கும் பாசமும் நேசமும் ஆங்காங்கே வெளிப்பட,தேசத்தலைவர்கள்
இடையிடையே வந்துபோக,இத்தோடு இரா.இரவியின் அநுபவத்துளிகள்
தேசியக்கொடியின் மூவர்ணமாய் நூல் முழுமையும் மிளிர்கின்றன.
கல்வெட்டும்
சொல்வெட்டும்;
சொற்களை மாற்றிப்போட்டு சுவைபட
ஹைக்கூ படைப்பது என்பது கவி இரவிக்கு
கைவந்த கலை.
“வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்!” (ப.35)
தாம் போகின்றபோக்கில் பார்க்கின்ற காட்சியை துளிப்பாவாக உருமாற்றுவதில் வல்லவர் இவர்.இதோ
ஒரு கண்ணீர்க் கவிதை!
“யாரும் வாங்காமலேயே
மலர்ந்தன பூக்கள்!
வாடினாள் பூக்காரி!(ப.33)
இலக்கிய
நயமிக்க மின்பா ஒன்று !
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து! (ப.34)
ஊடல்-கூடல் என இரண்டினையும்
ஒருங்கே சுட்டிக்காட்டும் ஒப்பீட்டுத் துளிப்பா இதோ!
புறத்தில் கோபம்!
அகத்தில் இன்பம்!
அவள் பலாப்பழம்!
முரண்சுவை
மிக்க ஹைக்கூ;
கோடிகளும் இலட்சங்களும்
கோவிலின் உள்ளே!
வெளியே பிச்சைக்காரர்கள்!(ப.44)
நிலையாமையை
உணர்த்தும் ஹைக்கூ!
சிற்பி இல்லை!
சிற்பம் உண்டு!
எது நிலை? (ப.58)
இதனை வாசித்தபொழுது முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் இயற்கைச் சீற்றத்திற்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கும் ஐயன் வள்ளுவன் சிலையும்
,அச்சிலையை வடிவமைத்து செதுக்கிய சிற்பியான கணபதி ஸ்தபதி சமீபத்தில்
இந்நிலவுலகினை விட்டு நீங்கியதும்தான் நினைவிற்கு
வருகின்றது!
இதோ கல்வெட்டுக் கவிதை!
தமிழைக் காப்பதில்
பெரும்பங்கு வகித்தன!
பனைமரங்கள்!
என தாய்மொழிப்பற்றோடும் துளிப்பாக்கள் கவியால் படைக்கப்பட்டுள்ளமை
பாராட்டத்தக்க ஒன்று!ஹைக்கூத்திலகம் என்ற
சிறப்புப் பட்டத்தைப் பெற்று, இலக்கிய உலகிற்கு
பெரும்பணி ஆற்றிவரும் கவிஞர்
இரா.இரவியின் பேரும் புகழும் அலைகடல்
தாண்டி அவனி முழுதும் எட்ட
என் போன்ற இலக்கிய வாசகர்களின்
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
—
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
வேண்டாம் தீபாவளி
சாகவில்லை நரகாசூரன்
வாழ்கிறான் இலங்கையில்
காக்கவில்லை கடவுள்
சாலை ஓவியரை
மழை
விலைவாசி ஏற்றம்
ஏழைகள் திண்டாட்டம்
தீபாவளி
மாளிகைக் குழந்தையை
ஏக்கத்துடன் பார்த்தது
குடிசைக் குழந்தை
சின்னமீன் செலவு
சுறாமீன் வரவு
அரசியல்
ஆசையால் அழிவு
தூண்டில் புழுவால்
உயிரிழந்த மீன்
தோன்றின் புகழோடு
தோன்றுக
வானவில்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
வேண்டாம் தீபாவளி
சாகவில்லை நரகாசூரன்
வாழ்கிறான் இலங்கையில்
காக்கவில்லை கடவுள்
சாலை ஓவியரை
மழை
விலைவாசி ஏற்றம்
ஏழைகள் திண்டாட்டம்
தீபாவளி
மாளிகைக் குழந்தையை
ஏக்கத்துடன் பார்த்தது
குடிசைக் குழந்தை
சின்னமீன் செலவு
சுறாமீன் வரவு
அரசியல்
ஆசையால் அழிவு
தூண்டில் புழுவால்
உயிரிழந்த மீன்
தோன்றின் புகழோடு
தோன்றுக
வானவில்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மனமெனும் நீதிமன்றத்தில்
மன சாட்சியே
நீதிபதி
ஆசைகளைக் குறைத்தால்
காணமல் போகும்
கவலை
கதை அளப்பவர்களின்
கட்டுக் கதை
வாஸ்து
ஒன்றில் எழுதியது மூன்றில்
நான்கில் எழுதியது எட்டில்
ராசிபலன்கள்
குறை உடலில்
நிறை மனதில்
மாற்றுத்திறனாளிகள்
உயிர்காப்பான்
தோழன்
தலைக்கவசம்
இன்றைய அமைச்சர்
நாளைய சிறைவாசி
அரசியல்
மேல் பார்த்தால் பொறாமை
கீழ் பார்த்தால் ஆறுதல்
வாழ்வியல்
கொலைகாரனையும்
கொடூரமானவனையும்
நேசிப்பவள் தாய்
ஆபாசம் ஊறுகாய் அன்று
ஆபாசம் சாப்பாடு இன்று
திரைப்படங்கள்
கூடியது அன்று
கூட்டுகின்றனர் இன்று
கூட்டம்
வன்முறை போதிக்கும்
போதி மரங்கள்
திரைப்படங்கள்
ஒரே குட்டையில்
ஊறிய மட்டையில்
சின்னத்திரை பெரியத்திரை
பார்த்தீனியமாகத் திரைப்படங்கள்
குறிஞ்சிமலராக எப்போதாவது
நல்ல படங்கள்
உயிருள்ளவரை
ஒட்டியே இருக்கும்
பிறந்தமண் நேசம்
தொடக்கம் பீர்
முடிவு பிராந்தி வாந்தி
இளைஞர்கள்
உளவியல்
மனம் செம்மையானால்
வாழ்க்கை செம்மையாகும்
நினைத்தது நடக்கும்
நல்லது நினைத்தால்
நல்லது நடக்கும்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
வேண்டாம் தீபாவளி
சாகவில்லை நரகாசூரன்
வாழ்கிறான் இலங்கையில்
காக்கவில்லை கடவுள்
சாலை ஓவியரை
மழை
விலைவாசி ஏற்றம்
ஏழைகள் திண்டாட்டம்
தீபாவளி
மாளிகைக் குழந்தையை
ஏக்கத்துடன் பார்த்தது
குடிசைக் குழந்தை
சின்னமீன் செலவு
சுறாமீன் வரவு
அரசியல்
ஆசையால் அழிவு
தூண்டில் புழுவால்
உயிரிழந்த மீன்
தோன்றின் புகழோடு
தோன்றுக
வானவில்
—
சுட்டும் விழி ஹைக்கூ நூல் திறனாய்வு கவிஞர் சி .விநாயக மூர்த்தி .செல் 9791562765
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .
பொதிகை மின்னல் 118.எல்டாம்ஸ் சாலை சென்னை .18. செல் 9841436213 விலை ரூ 40
மகாகவி பாரதியார் அவர்கள் வசன கவிதை வடிவில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்தியது போல் ,ஜப்பான் மொழியின் ஹைக்கூ கவிதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார் .எதிலும் முதன்மையாய் நின்ற பாரதி வழியில் இன்று சிறப்பாக ,செழிப்பாக வளர்ந்துள்ளது .
ஜப்பான் மொழியில் இருக்கும் சீர்க் கட்டுப்பாடுகளை ஒதுக்கிவிட்டு ,மூன்று வரிகளை மட்டும் நாம் ஏற்றுக்கொண்டு இதுவே ஹைக்கூ என்று எழுதி வருகிறோம் . இலக்கணப் புலவர்கள் எழுதிய மரபுக்கவிதைகள் பெரும்பாலும் , அரைத்த மாவையே அரைத்து இலக்கியத் தரம் குறைந்ததால் ,சமுதாயத் தாக்கம் மிகுந்த புதுக் கவிதைகளும், ஹைக்கூ கவிதைகளும் மக்கள் மனதில் இன்று நீங்கா இடம் பிடித்தன .
ஹைக்கூ கவிதைஎன்றால் மதுரைக்கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு தனிச் சிறப்பிடம் உண்டு .இலக்கியத்திற்காக இணைய தளங்கள் உருவாக்கி .உலக அளவில் அறிமுகம் ஆனவர் .எல்லாச் சிற்றிதழ் களிலும் அவரது படைப்புகள் தொடர்ந்து பதிவாகி உள்ளன .ஹைக்கூ நூல்கள்,மற்றும் திறனாய்வு நூல் எழுதி உள்ளார் .
சுட்டும் விழி என்னும் பெயர் சூடிக் கொண்ட இந்நூலில் ,அழகியல் ,சமுதாயச் சிந்தனைகள் ,இலக்கிய நயம் உள்ளன .
பறக்கும்
நட்சத்திரம்
மின்மினி !
அருமையான அழகியல் ஓவியம்
நாம் குழந்தையாக இருக்கும்போது தாலாட்டுகிறாள் தாய் .நாம் வளர்ந்த பிறகும் தாலாட்டுவது யார் ? இதோ கவிதையில் கூ றுகிறார் .
உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல் !
வானவில் மின்னும் ஏழு வண்ணங்களை வண்ணத் தமிழில் வர்ணிப்பதே நம் வழக்கம் .ஆனால் ,வானவில்லும் பாடம் போதிப்பதாக கவிதை வரைந்துள்ளார் .
உணர்த்தியது
நிரந்தரமற்றது
அழகு !
கம்பீர மாளிகை இடிந்து நொறுங்கிய கதையை ,எஞ்சி நிற்கும் குட்டிச் சுவர் கூட வரலாற்றுப் புத்தகமே என்று புதிய கண்ணோட்டத்தில் பாடுகிறார் .
கூறியது
வரலாறு
குட்டிச் சுவர் !
உடலின் மச்சங்கள் அழிவதில்லை .அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் அழியாத மச்சம் இருப்பதாகவும் ,அதுவே காதல் என்று கவிதை பாடுகிறார் .
மனத்தில் மச்சமென
நீங்கா நினைவு
காதல் !
அற்புதமான கற்பனை .
வளர்த்திட்ட மண்ணிற்கு நன்றி சொன்னது .மரம் .எந்த வகையில் ? கவிதையில் விடை தருகிறார் .
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது .மரம்
பூ உதிர்த்து !
பளிங்கால் அமைந்த தாஜ்மகாலை உலக அதிசயம் என்று எல்லோரும் புகழ்கிறோம் .கவிஞரோ வேறு கோணத்தில் கவிதை தருகிறார் .
வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மகால் !
தமிழ் மொழி உணர்வோடும் ,இன உணர்வோடும் பல கவிதைகள் படைத்துள்ளார் .
தமிழ் என்ற சொல்லின்றி
தமிழுக்கு மகுடம்
திருக்குறள் !
இக்கவிதை தமிழுக்கு புகழ் மகுடம் சூட் டுகின்றது .
பள்ளிக் கல்வி ,ஆங்கிலத்தைத் திணித்தாலும் ரத்தத்தில் கலந்துள்ளது தமிழ்தான் .அதனால்தான்
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
என்று முதல் கவியில் ,முதல் தரமான கவிதையில் மொழி உணர்வை வெளிப் படித்திள்ளார் .எல்லோரும் தமிழில் பெயர் வைத்தால் ,இனிமையாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்த
இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர் … என்கிறார்
யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ் !
உலகின் முதல் மொழி
மொழிகளின் தாய்மொழி
தமிழ் !
செய்தி வாக்கியம் போல் இருந்தாலும் சிறந்த கருத்தை அழுத்தம் திருத்தமாக கற்கண்டு சொற்கொண்டு கவி வடித்துள்ளார் .
கவித்துவம் மிகுந்த கவிதைகள் நிறையவே உள்ளன .
நிலம் விற்று
பெற்ற பணத்தில்
அப்பாவின் முகம் !
பரம்பரை நிலம் பறிபோன சோகத்திலும் அப்பாவை பாசத்துடன் நினைப்பது அருமை .
பொம்மை உடைந்த போது
மனது உடைந்தது
குழந்தை !
மலரினும் மெல்லியது குழந்தை மனம் .சிலரதன் செவ்வி தலைப்படுவார்.என்று புதுக்குறளை , புதுக்குரலாக ஒளிகிறது இக்கவிதை .
ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி !
பாட்டி மட்டுமல்ல ,பாட்டியைப் பிரிந்த குழந்தையும் அனாதையாய் தவிப்பதை கவித்திதுவமுடன் கூறுகிறார் .
ஆயிரம் பேர்
தனியாகத் தெரிந்தது
அவள் விழிகள் !
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன் என்ற கண்ணதாசன் திரை இசை நினைவுக்கு வருகிறது .
நடமாடும் நயாகரா
நடந்து வரும் நந்தவனம்
என்னவள் ….. இதுவும் அழகியல் படைப்பே
எந்த நூற்றாண்டுக்கும் தேவையான காந்தியின் கருத்துக்களை ,பல பாக்களில் பதிவு செய்துள்ளார் .
மனித உரிமைகளின்
முதல் குரல்
மகாத்மா !
மதுவால் தள்ளாடுவது
குடிப்பவன் மட்டுமல்ல
அவன் குடும்பமும் !
நல்ல படப் பிடிப்பு .
காவிரி நீர் அரசியலாகி விட்டது போல் ,கல்வியும் அரசியலாகி விட்ட அவலத்தை கவிதையில் சுட்டுகிறார்.
காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி !
அம்மாவைப் பாடாதவர் யாருமில்லை . இவரும் பாடுகிறார் .
உருகிடும் மெழுகு
உறைந்திடும் அழகு
அம்மா !
என்று உருகிப் பாடுகிறார் .
மனைவியைப் பற்றியும் மறவாமல் புதிய கோணத்தில் கவி புனைந்துள்ளார் .
மாதா பிதா குறு
ஒரே வடிவில்
மனைவி !
பெரியாரின் பகுத்தறிவுக் கருத்தையும் ,பறை கொட்டி முழக்குகிறார்.
எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !
ஈழத்தமிழர் அவலத்தையும் இதய வலியோடு எழுதியுள்ளார் .
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயந்தோர் வலியை !
கவிதை படிக்கும் போது நமக்கும் வலிக்கிறது . .
ஈழத்தமிழர்கள் லட்சக் கணக்கில் ,படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .இறந்தவர்களின் ஆவி தமிழகத்துள் நுழைந்து பல அரசியல் தலைவர்களை பழி தீர்த்துக் கொண்டதாக பகிரங்கமாய்ப் பாடுகிறார் .
ஈழத்தில் மரித்த உயிர்கள்
இன்று பழி தீர்த்தன
தேர்தல் முடிவு !
கவிதைக்கு சுவை சேர்ப்பதில் ,முரண் தொடை முக்கிய பங்கு வகிக்கிறது இதோ சில கவிதைகள் .
கோடிகளும் லட்சங்களும்
கோயிலின் உள்ளே
வெளியே பிச்சைக்காரகள் !
கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !
யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினால் பூக்காரி !
இக்கவிதைகளில் முரண் தொடை நயம் தூக்கலாக உள்ளது .
ஹைகூவின் உயிர்த் துடிப்பு ,மூன்றாம் வரியின் திருப்புமுனையே .இதோ உதாரணங்கள் .
யானைப் பசிக்கு
சோளப்பொறி
இது எல்லோரும் அறிந்த பழமொழி .இதற்கு உதாரணமான குறைந்த கூலியைச் சொல்வதுதான் வழக்கம் .கவிஞரோ வித்தியாசமாக முடிக்கிறார்.
யானைப் பசிக்கு
சோளப்பொறி
அவள் முத்தம் … என்கிறார்
மூன்றாம் வரியின் திருப்புமுனையாக ,மேலும் பல நல்ல கவிதைகள் உள்ளன .
மழை வந்ததும்
உடன் வந்தது
மண் வாசனை !
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை !
\
ராமன் ஆட்சி
இராவணன் ஆட்சி
ஒழியாத வறுமை !
குழந்தைகளுக்கு
குச்சி மிட்டாயாய்
வாக்களிக்கப் பணம் !
இன்னும் இன்னும் ஏராளம் உள்ளன .
சேமிக்கும் எறும்பு
வருகிறது மழைக்காலம்
மனிதன் ?
மூவறிவுடைய எறும்புகளிடம் ஆறறிவு மனிதன் பாடம் படிக்க வேண்டிய அவசியத்தை கவிஞர் உணர்த்துகின்றார் .
ஊறுகாய்களை ,சாப்பாடு போல் சாபிடுவது ,எங்கும் நடப்பதில்லை .இங்கு நடப்பதாகக் கூறுகிறார் .பகுதி நேரம் மட்டுமே பயணப் படுத்தவேண்டிய தொலைக் காட்சியில் முழு நேரமும் முழ்கிக் கிடப்பதை அவ்வாறு கூறுகிறார் .
அயல் நாடுகளில் ஊறுகாய்
நம் நாட்டில் சாப்பாடு
தொ( ல் )லைக் காட்சி !
கட்சிக் கொடி தவிர்
பச்சைக் கொடி வளர்
பசுமைத் தாயகம் !
கொடி என்ற சிலேடை நயம் ,தேன் சொட்டுகிறது .
தண்ணீரை வீணாக்க கூடாது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் , தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளும் ஒழுகத்தான் செய்கின்றன .இதைக் கவனித்து கற்பனைத் தூரிகையால் கவிச் சித்திரம் வரைகிறார் .
கோலமிட்டுச் சென்றது
வறண்ட சாலையில்
தண்ணீர் லாரி !
சுட்டும் விழி என்ற இந்நூலுக்குள் கற்பனை நயம் ,அழகியல் உருவகம் .முரண் தொடைச் சுவை ,சிலேடைச் செந்தேன், வீரியம் மிக்க கருத்துக்கள் அதனையும் ஒருங்கே அமைந்துள்ளன.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய இலக்கியப் பெட்டகம்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி
தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல்
காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல்
மவ்னமாகவே இருக்கும்
காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல்
உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல்
காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல்
தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல்
இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல்
அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல்
எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல்
கானம் இசைத்து
கவலைப் போக்கும்
புல்லாங்குழல்
பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல்
விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல்
அவள் ! கவிஞர் இரா .இரவி
வெள்ளையும் இல்லை
கருப்பும் இல்லை
உயரமும் இல்லை
குள்ளமும் இல்லை
பேரழகியும் இல்லை
அசிங்கமும் இல்லை
அறிவாளியும் இல்லை
முட்டாளும் இல்லை
ஆர்ப்பட்டமும் இல்லை
அமைதியும் இல்லை
அவளுக்கு உவமை
அவனியில் இல்லை
புன்னகை செய்தால்
பூரிக்கும் உள்ளம்
மூளையில் நுழைந்து
மூலையில் அமர்ந்தாள் !
காதலர்கள் கவிஞர் இரா .இரவி
ஊடல் காரணமாக
இருவரும் இனி
சந்திக்க மாட்டோம்
என முடிவு எடுத்து விட்டு
இனி எப்போது சந்திப்போம்
என்று சந்திப்பைப் பற்றியே
சிந்தித்து ஏங்குபவர்கள் !
நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி
பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்
கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை
எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நினைவுச் சிலுவை
ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்வார்கள்
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை !
தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி
அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
தொடர்கதையானது !
கோலம் ! கவிஞர் இரா .இரவி
கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான்
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
கூட்டித் தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு !
ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .
அரசியலில் ஊழல் !
அரிசியிலும் ஊழல் !
ஆற்றுமணலில் ஊழல் !
செம்மண்ணிலும் ஊழல் !
ஆயுதத்தில் ஊழல் !
ராணுவத்திலும் ஊழல் !
நிதித்துறையில் ஊழல் !
நீதித்துறையிலும் ஊழல் !
நிலத்தில் ஊழல் !
நிர்மானத்திலும் ஊழல் !
தொலைபேசியில் ஊழல் !
தொலைக்காட்சியிலும் ஊழல் !
கல்லில் ஊழல் !
பாறையிலும் ஊழல் !
நிலக்கரியில் ஊழல் !
நிலத்தடி நீரிலும் ஊழல் !
விளையாட்டில் ஊழல் !
கிரிக்கெட்டிலும் ஊழல் !
மருத்துவத்தில் ஊழல் !
மருத்துவக்கல்லூரியிலும் ஊழல் !
காவல்துறையில் ஊழல் !
உளவுத்துறையிலும் ஊழல் !
சுகாதாரத்தில் ஊழல் !
சுடுகாட்டிலும் ஊழல் !
உதவித்தொகையில்ல்ல் ஊழல் !
உன்னத ஆசிரியர்களும் ஊழல் !
மாற்றுத்திறனாளிகள் உதவியில் ஊழல் !
மாற்றுஅரசியலிலும் ஊழல் !
ஊழலோ ஊழல் !
எங்கும் எதிலும் ஊழல் !
வாழ்க ஜனநாயகம் !
வளர்க பணநாயகம் !
உலகின் பெரிய ஜனநாயக நாடு !
உலகின் பெரிய ஊழலோ ஊழல் !
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் !
வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க !
வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் !
வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் !
புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை !
பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் !
உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் !
உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் !
தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை !
தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் !
வர்த்தகம் என்ற பெயரில் நமது நாட்டின் !
வளங்களை சிதைத்திட வருகிறான் வெள்ளையன் !
வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் !
வால் முளைக்காத குரங்கு வர உள்ளது !
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக !
குமுகாயம் சிதைக்க வருகிறான் வெள்ளையன் !
பன்னாட்டு முதலாளிகள் அல்ல அவர்கள் !
பன்னாட்டு முதலைகள் அவர்கள் எச்சரிக்கை !
கண்களை விற்று ஓவியம் வாங்கலாமா ?
களவாணிகளை விட்டு வேடிக்கைப் பார்க்கலாமா ?
அபகரிக்க வருகிறான் மிகவும் ஆபத்தானவன் !
அனைவரும் சேர்ந்து நின்று எதிர்த்திடுவோம் !
.
அன்று வணிகம் என்றதான் வந்தான் வெள்ளையன் !
அடிமைப்படுத்தி ஆளத்தொடங்கி ஆணவம் பெற்றான் !
இன்றும் வணிகம் என்ற பெயரில் வருகிறான் !
இழித்தவாயராக இருந்தால் ஆளத்தொடங்கிடுவான் !
தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம் !
தூங்குவது போல நடிப்பவர்ககளை எழுப்ப முடியாது !
பலகோடிகள் அரசியல்வாதிக்கு லஞ்சம் தந்து வருகிறான் !
பல் இளித்து கொள்ளையனை வரவேற்கின்றனர் !
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து !
நித்தம் பாட்டிலில் அடைத்து விற்றுக் கொள்ளை !
அடிக்கின்ற கொள்ளைகள் போதாதென்று !
அடிக்க வருகிறான் சில்லறை வணிகம் என்று !
சில்லறை வணிகம் என்ற பெயரில் நாட்டில்
மொத்தக் கொள்ளை அடித்திட வருகிறான் !
புதியவை என்ற பெயரில் குழியில் நம்மை !
புதைத்து அழித்திட வருகிறான் வெள்ளையன் !
தூய்மை என்று சொல்லி ஏமாற்றி !
துயரம் தந்திட வருகிறான் வெள்ளையன் !
நாகரிகம் என்று சொல்லி நாட்டில் !
நம்மை சீரழிக்க வருகிறான் வெள்ளையன் !
நோய் தரும் பொருள்களை விற்று !
நோய்நீக்கும் மருந்து விற்க வருகிறான் வெள்ளையன் !
சின்னப்புத்திக் காரர்களின் சின்னத்தனம் !
சில்லறை வணிகத்தில்அந்நிய அனுமதி !
உலக நாடுகளில் விரட்டியடிக்கப்பட்டவன் !
ஒதுங்க வருகிறான் விரட்டிடுவோம் வாருங்கள் !
உஷார் அய்யா !உஷாரு ! அட்டைப் பூச்சியாக !
உறிஞ்சிக் குடிப்பான் உஷார் !அய்யா உஷாரு !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடங்கங்கள் திருந்த வேண்டும் !
என்று திருந்தும் எமது நாடு !
ஏழை எளியவர்களின் விடியலை நாடு !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com
http://www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தமிழன் அன்றும் இன்றும் ! கவிஞர் இரா .இரவி !
குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக்
குணத்துடன் போர்வை வழங்கிய பேகன் ஒரு தமிழன் !
முல்லைக் கொடிப் படர பயணித்தத் தேரை
மனம் உவந்து வழங்கி பாரி ஒரு தமிழன் !
ஆராய்ச்சி மணி அடித்த பசுவுக்கு
அன்புடன் நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஒரு தமிழன் !
சந்தோசம் இழந்து தவித்த புறாவிற்கு
சதையை அறுத்துத் தந்த சிபிசக்கரவர்த்தி ஒரு தமிழன் !
தமிழ் தமிழர் என்ற சொற்களின்றியே உலகப்பொதுமறையாக்கி
தமிழுக்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவர் ஒரு தமிழன் !
நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் கல்லணை
நிறுவி இன்றும் நிலைத்து நின்ற கரிகாலன் ஒரு தமிழன் !
உலகம் வியக்கும் வண்ணம் சிற்பங்களுடன் மதுரையில்
உன்னத மீனாட்சி கோவில் கட்டிய பாண்டியன் ஒரு தமிழன் !
கோபுரத்தின் நிழல் விழாமல் பெரிய கோவிலைக்
கட்டி எழுப்பிய இராஜராஜ சோழன் ஒரு தமிழன் !
தவறான நீதி கோவலனுக்கு வழங்கியதற்காக
தன் உயிரையே மாய்த்த பாண்டியன் ஒரு தமிழன் !
முரசுக்கட்டிலில் அயர்ந்து உறங்கிய புலவர்க்கு
மன்னன் சாமரம் வீசிக் காற்று வழங்கியது ஒரு தமிழன் !
நடிகைக்குக் கோவில் கட்டி மோசமான வரலாறு படைத்து
நாட்டிற்குத் தலைக்குனிவைத் தந்தவன் ஒரு தமிழன் !
அரிதாரம் பூசும் நடிகரை எல்லாம் கடவுள் என்றும்
அவதாரப் புருசன் அழைப்பவன் என்றும் ஒரு தமிழன் !
நடிகரின் கட்அவுட்டிற்கு பாலபிசேகம் செய்து மகிழும்
ரசிகனும் இன்றைய ஒரு தமிழன் !
திரையரங்கில் பிடித்த நடிகரின் திரைப்படம் பார்க்கும்போது
திரையரங்கிலேயே சூடம் ஏற்றிக் காட்டுபவனும் ஒரு தமிழன் !
பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவராததற்காக
பிடித்த உயிரையே மாய்த்தவன் இன்றைய ஒரு தமிழன் !
தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சியில் நேரத்தை
தொலைத்துவிட்டு வாடி நிற்பவனும் ஒரு தமிழன் !
மதுக்கடையில் மதுக் குடித்து மயங்கி
மண்ணில் விழுந்தக் கிடப்பவனும் ஒரு தமிழன் !
ஆங்கிலவழிக் கல்வியில் பயின்று முடித்துவிட்டு
அன்னைத் தமிழில் பேச வராது என்பவனும் ஒரு தமிழன் !
தந்தையின் பெயரான முன்எழுத்தை ஆங்கிலத்திலும்
தன் பெயரைத் தமிழிலும் எழுதுபவன் ஒரு தமிழன் !
பேசுகின்ற பேச்சில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து
பைந்தமிழைக் கொலை செய்து வருபவனும் ஒரு தமிழன் !
தாய்மொழி தமிழில் பேசத் தெரிந்தும் அரைகுறையாக
தமிழர்களிடையே ஆங்கிலத்தில் பேசுபவனும் ஒரு தமிழன் !
தன்னம்பிக்கையின்றி மூட நம்பிக்கையான சோதிடத்தை நம்பி
தன்மானம் இழந்து ஏமாந்து வருபவனும் ஒரு தமிழன் !
பித்தலாட்டக்காரன் என்று தெரிந்தே சாமியாரிடம்
பணத்தைப் பறி கொடுப்பவனும் ஒரு தமிழன் !
வந்தவர்களை எல்லாம் வலமாக வாழ் வைத்துவிட்டு
வாழ்க்கையைத் தேடி புலம்பெயர்பவனும் ஒரு தமிழன் !
பசித்திருக்கும் தாய் தந்தை மறந்து கோவிலில்
பணத்தைப் போடுபவனும் ஒரு தமிழன் !
தமிழினத்தை ஈழத்தில் படுகொலைகள் செய்தபோதும் கள்
தமிழகத்தில் வேடிக்கைப் பார்த்தவனும் ஒரு தமிழன் !
தமிழனின் நிலையை அன்றும் இன்றும் பாருங்கள்
தமிழா உன் நிலையை மாற்று !தமிழரின் பெருமையை நிலை நிறுத்து !
.