book

பயம் எனப்படுவது யாதெனில்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ, தியான் மைத்ரேயா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :220
பதிப்பு :2
Published on :2020
ISBN :9788184028430
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

பயம் உனது நிழலைப் போன்றே சாரமற்றது, ஆனால் அது இருக்கிறது. நிழலும் இருக்கிறது. சாரமற்றது, எதிர்மறையானது, ஆனால் இல்லாததல்ல.

நினைவில் கொள். நடுக்கம் மிகவும் உண்மையானது. பயம் ஒரு கனவைப் போன்றது. ஒரு திகில் கனவு, ஆனால் ஒரு திகில் கனவிற்கு பிறகு நீ எழுந்தால் அதன் பாதிப்புகள் இன்னமும் இருக்கின்றன. விளைவு தங்கியிருக்கிறது. உன்னுடைய மூச்சு மாறிவிட்டது.

நீ வியர்க்கிறாய், உனது உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கிறது, நீ சூடாக இருக்கிறாய். இப்பொழுது அது ஒரு வெறும் திகில் கனவு, ஒரு கனவு, சாரமற்றது என்பதை நீ அறிவாய். ஆனால் இந்த அறிதல் கூட உனது இருப்பின் அடிஆழத்திற்கு ஊடுருவிச்செல்வதற்கு நேரமெடுத்துக்கொள்கிறது. அது வரையில் சாரமற்ற கனவின் பாதிப்பு தொடரும். பயம் ஒரு திகில் கனவு.

பயம் எதனால் ஆனது? தன்னை அறியாத தன்மையினாலேயே பயம் உருவாகியிருக்கிறது. அங்கு ஒரேயொரு பயம் மட்டுமே இருக்கிறது. அது பல வழிகளில் வெளிப்படுகிறது. அது ஆயிரத்தொரு வழிகளில் வெளிப்படலாம். ஆனால் பயம் அடிப்படையில் ஒன்றுதான்.