book

கருப்புப் புத்தகம்

₹590
எழுத்தாளர் :எத்திராஜ் அகிலன், ஓரான் பாமுக்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :623
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789389820089
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஓரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்ஃபரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும்ம் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்துவம் அடைகிறது. வெவ்வேறு கலைவடிவங்களையும், அறிவுப் புலங்களையும் தன்னூடே பயன்படுத்துவதால் அவரது நாவல்கள் இயல்பாகவே விரிவும், ஆழமும் கொண்டவையாக இருக்கின்றன. செறிவான கற்பனையினால் புனைவின் சாத்தியங்களை விஸ்தரிக்கும் பாமுக் தன் எழுத்தில் மையப்படுத்தும் மர்மம் வாழ்க்கையினுடையதே. அடையாளத் தேடல் என்னும் அவ்வாறான ஒரு மர்மத்தை புதிர்கள், ரகசியங்கள், குறியீடுகள் நிறைந்த பாதையின் வழியே துலக்கும் ஒரு பிரம்மாண்டமான பயணமே "கருப்புப் புத்தகம்".