book

தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நந்தினி ஹக்சர், அருள் குமரன்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :392
பதிப்பு :2
Published on :2017
ISBN :9788189867348
Add to Cart

13.12.2001 அன்று ஆறு தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளில் ஐந்து பேரை சுட்டுக்கொன்றனர். அத்தாக்குதலின் போது பாதுகாப்பு படையினரில் எட்டு பேர் உயிரிழந்தனர். தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை, அதற்கென அமைக்கப்பட்ட பொடா தனி நீதி மன்றத்தில் நடைபெற்றது. தில்லி பல்கலைக் கழக விரிவுரையாளரான எஸ்.ஏ.ஆர் கிலானி, முகமது அப்சல், சௌகத் அலி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பிட்ட நீதிபதி மூவருக்கும் மரணதண்டனை வழங்கினார். மூவரும் காஷ்மீரிகள், தனி நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய தனிப்பட்ட நோக்கம் (காஷ்மீர் இசுலாமியர்களை நீதிக்கு புறம்பாக மரணதண்டனைக்குள்ளாக்க வேண்டும்), இசுலாமியர்களுக்கு எதிரான முன்முடிவு, பரந்த அறிதலற்ற பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கினார் என இந்நூலின் ஆசிரியர் நந்திதா திட்டவட்டமாக எடுத்துரைப்பதோடு, நீதியற்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய ஊடகங்கள் எதுவும் எழுதவில்லை 'எனவும் சன்றிதலோடு கூறுகிறார்.