book

ஷா இன் ஷா

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388631129
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார். இந்தத் திருப்புமுனைக் காலத்தை முன்வைக்கும் நூல் ஷா இன் ஷா. போலந்து நாட்டைச் சேர்ந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ரிஸார்த் காபுஸின்ஸ்கி கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்களில் இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்து சேகரித்த தகவல்களின் திரட்டு இந்த ஆவணம். சர்வாதிகாரி ஷாவின் கொடுங்கோன்மை, முறைகேடு, சுயநலம் ஆகியவற்றால் மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான ஒரு நாடு எப்படி சீரழிந்தது, மக்கள் எவ்வாறு அச்சத்தைத் துறந்து எழுச்சி பெற்றார்கள், புதிய அரசு என்னவாக அமைந்தது என்பன போன்ற கேள்விகளுக்கு இரானிய மக்களின் வாக்குமூலங்கள் வழியாகவே விடை காண்கிறார் காபுஸின்ஸ்கி. விரிவான தகவல்கள் கொண்ட இந்நூல், எழுதப்பட்டிருக்கும் உண்மை ஒளிரும் உணர்ச்சி ததும்பும், மொழியால் ஓர் இலக்கியப் பிரதியாக மாற்றம் கொள்கிறது. இது வெறும் வரலாற்று நூல் அல்ல; அதிகாரத்தின் தீவினை பற்றி எச்சரிக்கும் மானுடப் பிரகடனம்.