book

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாரிதாஸ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :317
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788184939873
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள் நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற்றுவிடுவார்; அவர் தமிழ்ப் பண்பாட்டையே அழித்துவிடுவார் என்றெல்லாம் மிகக் கடுமையான பிரசாரம் எல்லாத் தளங்களிலும் அவிழ்த்துவிடப்பட்டது. தமிழ்நாட்டின் சில முக்கிய ஊடகக் குடும்பங்கள் இதில் முன்னணியில் நின்றன. இந்தப் பிரிவினைவாத நச்சூற்றுப் பிரசாரத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டில் ஒரு நல்ல குரல் எழும்பாதா என பாரத தேசத்தின் நன்மையிலும் தமிழ் நாட்டின் நலத்திலும் அக்கறை உள்ளவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தார்கள். அப்போது மாரிதாஸ் சற்றும் தயங்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் மோதிக்கு எதிரான பிரசாரப் பொய்களை அடித்து நொறுக்கினார். உணர்ச்சியையும் அறிவையும் தரவுகளையும் சரியான விகிதங்களில் கலந்து அவர் கொடுத்த வாதங்கள் இடதுசாரிகளைப் பயந்து நடுங்கவைத்தன. அவர்களின் பிரசாரப் பதுங்கு குழிகளில் பாய்ந்து ஒடுங்கவைத்தன.