book

கஸ்டமர் சைக்காலஜி

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194932147
Add to Cart

எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா?

சாத்தியம் என்கிறார் பிரபல மார்க்கெட்டிங், நிர்வாகவியல் குரு சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. அடிப்படையான சில உளவியல் பாடங்கள் கற்றுக்கொண்டால் போதும். கஸ்டமர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என்கிறார் இவர்.

மக்கள் ஏன், எப்படி, எதை வாங்குகிறார்கள் என்பதை ஆராயும் துறைக்கு கஸ்டமர் சைக்காலஜி என்று பெயர். மக்களுக்கு ஏற்றவாறு மார்க்கெட்டிங் உத்திகளை வகுப்பதன்மூலம், அவர்கள் ஆழ்மனத்திலுள்ள அறிவாற்றல் அவர்கள் தேர்வுகளை எப்படிப் பாதிக்கிறது என்பதை அறிந்துகொள்வதன்மூலம், அவர்கள் எதை வாங்குவார்கள், எதை வாங்கமாட்டார்கள் என்பதை நம்மால் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடியும்.

இந்நூல் கஸ்டமர் சைக்காலஜியின் கச்சிதமான சாரத்தை உங்களுக்கு வழங்குகிறது. இதைப் படித்த பிறகு கஸ்டமர்களை பற்றிய புரிதல் இப்போது இருப்பதைக் காட்டிலும் நிச்சயம் உங்களுக்கு அதிகரித்திருக்கும். அதன்மூலம் இப்போது பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிக வெற்றிகளை நீங்கள் குவிக்கவும் முடியும். ஆல் தி பெஸ்ட்!