book

மக்கள் கவிஞர் கண்ணதாசன்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீலம் மதுமயன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

மனிதன் எதார்த்தமானவனாக வாழ வேண்டும். அவனே தன்னை எதிர்கால வாழ்க்கைக்கும் அழைத்துச் செல்பவன். அந்த வரிசையில் உள்ளதை உள்ளவாறு கூறி, உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறாத உத்தமனாக தன் வாழ்வைத் தகவுற அமைத்துக் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். அவரது எண்ணங்கள் எதார்த்தமானவை என்பதால் நம்மை மேம்படுத்தும் என்று இதனை எழுதத் துவங்கினேன். ஒளிவு மறைவற்றவர் கவியரசு. தனது குணங்களை இரண்டாகப் பிரித்து ஒன்றை மறைத்தும் ஒன்றை வெளிப்படுத்தியும் வேடம் போடத் தெரியாதவர் செட்டிநாடு தந்த சிங்கம்.
மறுப்பா? ஆட்சேபனையா? எதிர்ப்பா? ஆதரிப்பா? முரணான கருத்தா? எதுவானாலும் தன் எதார்த்த வார்த்தைகளால் வெளிக்காட்டிய வெள்ளைப்பக்கம் இவர்.
'இந்திய ஜனாதிபதி போல் சம்பளம் வாங்கினேன் - இந்தியா போல் கடனாளியாக இருக்கின்றேன் - என்று அவர் தன்னைப் பற்றி அளித்த பேட்டி அவரின் எதார்த்தத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு மட்டுமல்ல, எதையும் நகைச்சுவை உணர்வோடு நோக்குவார். நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்துவார். 'நீங்கள் ஏன் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பத்திரிகை யாளர் கேட்ட கேள்விக்குக் கவியரசு, 'நானெங்கே மாறுகிறேன்? கட்சிகள் தான் என்னைவிட்டு மாறிக் கொண்டிருக்கின்றன! என்றவர்.