தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்)
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :328
பதிப்பு :5
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartதமிழ் இலக்கியம் ஏறத்தாழ இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாற்றினை உடையது. தென்னிந்தியாவின் பிற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியவை. ஆகையால் அதற்கு முன்னர் பன்னிரண்டு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியம் தனியே வளர்ந்து வந்தது. சங்க காலத்துக்கும் கி.பி 7-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழகத்தில் இருந்திருக்கிறது.
சமண சமயமும், புத்த சமயமும் தமிழகத்தில் பரவத் தொடங்கிய பிறகு, அந்தச் சமயங்களைச் சார்ந்தவர்களில் பலரும் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றவர்களாக இருந்ததனால் வட நாட்டு மொழிகளின் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின. இந்தியாவில் இலக்கிய மொழிகளாக மதிக்கப்பட்டிருந்த மொழிகள் வடமொழியும் தமிழ் மொழியும் ஆகும். இவற்றை தென்மொழி, சமஸ்கிருதம் என்று குறிப்பிடுவர்.
சிவபெருமானின் தமருகத்தின் ஒரு பக்கத்திலிருந்து பிறந்த ஒலி தமிழ் ஆயிற்று என்றும், அந்தத் தமருகத்தின் மற்றொரு பக்கத்தில் பறிந்த ஒலி வடமொழி ஆயிற்று என்றும் புராணக்கதை வழங்கத் தொடங்கியது. சிவன் வடமொழியைப் பாணினிக்கும் தென் மொழியாகிய தமிழை அகத்தியர்க்கும் கற்றுக் கொடுத்து இரு மொழிகளையும் வளரச் செய்தார் என்றும் புராணக்கதைகள் வழங்கப்படுகின்றன