book

சமையல் கலை (330 சமையல் குறிப்புகள் கொண்ட ஒரே புத்தகம்)

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீதாலக்ஷ்மி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :150
பதிப்பு :21
Published on :2004
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சமையல் செய்யும் பொது அடுப்புக்கரி, எண்ணெய் முதலியவை ஆடையில் படலாம். சமையல் செய்யவென்றே தனி ஆடைகளை வைத்திருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டால் கரி, எண்ணெய் பட்டுப் பாழாகி விடும். சமையல் செய்யும்போது உடுத்தும் ஆடைகளைத் தினமும் இரவு கசக்கிப் போட்டு காய வைத்து உடுத்துவது சிறந்தது. 

சமையலறையிலே சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. வேறு வழியில்லாத போது அப்படிச் செய்யலாம். ஆனால், சாப்பிட தனி அறை இருப்பதே நல்லது. சாப்பிட்ட உடனே சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈ முதலியவை சூழ்ந்து தீமையை விளைவிக்கலாம். 

சமையல் கலையைப் போலவே சாப்பாடு பரிமாறுவதும் ஒரு தனிக்கலை. சாதாரண நாட்களிலேயே அது முக்கியமானது. விஷேச நாட்களிலும் விருந்துகள் நடத்தும்போதும் மிக முக்கியமாகி விடுகிறது. சாப்பிடுவர் முகம் அறிந்து இலை அல்லது தட்டை பார்த்துப் பரிமாற வேண்டும். சிலர் சங்கோசிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சாப்பிட உட்காந்தால் பரிமாறுபவர்தான் கவனிக்க வேண்டும். பரிமாறுபவர் கவனக் குறைவாக இருந்தால் சங்கோசியான சாப்பிடுபவர்கள் அரை வயிறு கூடச் சாப்பிட முடியாது.