book

சேரனின் காதலி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அபிராமி பாஸ்கரன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

தமிழ் இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கும் நமது வரலாறு அளவிடற்கரியது! சேர, சோழ, பாண்டிய, வேளிர் என தமிழரின் பழம்பெரும் வரலாற்று பெருமைகளையும், தமிழர்களின் வாழ்வியலையும் சங்க இலக்கியங்கள் அழகுற எடுத்து இயம்பு கின்றன. சங்க இலக்கியங்களை படிக்க ஒரு ஆயுள் போதாது. படிக்க படிக்கத் தெவிட்டா தேனின்ப இலக்கியங்கள் அவை. அவற்றை எழுதிய புலவர்களும் பெரும் மேதைகளே!ஆண் புலவர்களுக்கு சமமாக பெண் புலவர்களும் போற்றி வணங்கப்பட்டுள்னர். பெண் புலவர்கள் பலரில் ஒருவரான காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் - காலத்து கதை தான் இந்த 'சேரனின் காதலி', காக்கைப் பாடினியார், சேர மன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் குறித்து பாடிய, பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தினை அடிப்படையாக கொண்டே இந்த நாவலினை புனைந்துள்ளேன். பல வரலாற்று நிகழ்வுகளோடு என் கற்பனையையும் இணைத்து எழுதியுள்ளேன். சேரனின் காதலி எனது இரண்டாவது சரித்திர நாவல்.