book

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜர்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :256
பதிப்பு :16
Published on :2017
Add to Cart

அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் மதிப்புரை எழுதி, மூத்த எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதியுள்ள ‘மதப்புரட்சி செய்த மகான் இராமானுஜர். மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் சாதி பேதமற்ற சமுதாயத்தைப் படைக்கச் சான்றோர்கள் பாடுபட்டுள்ள வரலாற்றை நாம் அறிவோம். அவர்களுக்கொல்லாம் வழிகாட்டும் வகையில் வாழ்ந்தவர்கள் மகான் ஸ்ரீ ராமானுஜர் போன்றவர்களாகவே இருக்க முடியும் என்பதைத் தான் இந்நூலைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவிலே தோன்றிய திருக்கச்சி நம்பிகளைத் தம்முடைய குருவாக மதித்து வணங்கி ஏற்றுக்கொண்ட இராமானுஜர், அவ்வாறே தம்முடைய சீடர்களாகவும் உறங்கா வில்லிதாசன் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் ஏற்றுக் கொண்டிருந்த அந்த வரலாறுகள் எல்லாம் இந்நூலில் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கின்றன.                                                                                                                                                                                                                            எழுத்தாளர் பற்றி : சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரைச் சேர்ந்த சடகோபன் அய்யங்கார் - பூங்கோதைவல்லி தம்பதியருக்கு 1910, நவம்பர் 6-ம் தேதி மகனாய்ப் பிறந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம்பெற்ற அவர், அப்போதே தேச விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டார். 
 
‘பலாத்காரம்’ என்கிற தமிழகத்தின் முதல் அரசியல் நாவலை எழுதினார். அந்த நூலுக்கு, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதியிருந்தார். ‘கன்னிமாடம்’, ‘கடல்புறா’ (மூன்று பாகங்கள்), ‘யவனராணி’ மூங்கில்கோட்டை’, ‘ராஜ பேரிகை’, ‘அவனி சுந்தரி’, ‘பல்லவ பீடம்’ முதலிய பிரமாண்டமான நாவல்களை எழுதினார். இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் ‘கடல்புறா’. இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. 2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சுந்தர ராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் கண்டனம் தெரிவித்தனர். சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.