book

சின்னச் சின்ன அறிவியல் மேஜிக்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றில் குமார்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஒரு காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைச் கண்டாலே அனைவரும் அஞ்சி நடுங்கினர். இதனால் ஏதாவது பெரும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பது அவர்களது நடுக்கத்தின் காரணம். பழமையான கொள்கைகளுக்குத் தீங்கு விளைந்துவிடுமோ என்ற அச்சம்.
இதனால் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மனமில்லாமல் இருந்தனர். அத்துடன் அவ்வாறு கண்டுபிடிக்கும் அறிஞர்களைப் பிடித்துத் தண்டிக்கவும் செய்தனர்.
மூடநம்பிக்கைகளில் திளைத்துப்போய், அதனையே வாழ்வின் முழு ஆதாரமாகக் கருதி வாழ்ந்த காரணத்தாலேயே இவ்வாறு அறிவியலும், அறிஞர்களும் எதிரிகளாகப் பார்க்கப்பட்ட நிலை இருந்தது.
ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. அறிவியலுக்குத் தான் மரியாதை. அறிவுசார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு அனைவரிடமும் சகல வரவேற்பு.
உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அதன் வேகம் சீராகச் சென்று வளமான எதிர்காலத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற அறிவியல் சாதனைகளின் அடிப்படை என்னவென்று பார்த்தால் மிகச்சிறிய ஒன்றாகவே இருக்கும். அந்தச் சிறிய சிறிய விஷயங்களை, அற்புதங்களை, விளக்குவதே இந்நூல்.