book

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

₹359.1₹399 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகலட்சுமி சண்முகம், ராபர்ட் கியோஸாகி
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :246
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788183223751
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் அறிவுரைகளோடு முரண்பட்டு நிற்கின்ற கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள அவர், தன் கருத்துக்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவர். பொருளாதாரக் கல்வி அவசியம் தேவை என்று உணர்வுபூர்வமாக வலியுறுத்தி வருகின்றவர் என்று உலக அளவில் அவர் மதிக்கப்படுகிறார். "மக்கள் பொருளாதாரரீதியாகப் போராடிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், அவர்கள் பல வருடங்களை ஏட்டுக் கல்வி கற்பதற்காகச் செலவிட்டுள்ள போதிலும், பணத்தைப் பற்றித் துளிகூடக் கற்றுக் கொள்ளாமல் இருந்துவிட்டதுதான். அதன் விளைவாக அவர்கள் பணத்திற்காக வேலை செய்யக் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்க அவர்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை." - ராபர்ட் கியோஸாகி இதுவரை வெளிவந்துள்ள தனிநபர் நிதி நிர்வாகப் புத்தகங்களில் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எனும் இப்புத்தகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. "தங்களுடைய பொருளாதாரத் தலைவிதியை நிர்ணயிக்கத் தேவையான கட்டுப்பாட்டைக் கைவசப்படுத்திக் கொள்ள விரும்பும் எவரொருவரும் துவக்க வேண்டிய இடம் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எனும் இப்புத்தகம்தான்."- யுஏஸ்ஏடுடே