
காலவரம்பு சட்டம் 1963 (The Limitation Act 1963)
The Limitation Act 1963
₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
காலவரம்பு சட்டம் என்பது, உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொதுவான ஒரு சட்டமாகும் ஒவ்வொரு வழக்கையும், மனுக்களையும் மேல்முறையீட்டையும் மற்றும் சீராய்வு மனுக்களையும் இவ்வளவு கால அளவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்தச் சட்டத்தில் குறிப்பிடப்படாத கால அளவுகள், இந்த காலவரம்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, எந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவைக் கடந்து, ஒரு மனுதாக்கல் செய்யப்படும்போது, அந்த மனுவுடன் காலதாமத மன்னிப்பு மனு ஒன்றை, உண்மை உறுதிமொழி ஆவணத்துடன் (with affidavit) தாக்கல் செய்தல் வேண்டும். காலதாமத மன்னிப்பு மனுவை காலவரம்பு சட்டம், பிரிவு 5-இன் கீழ் தாக்கல் செய்தல் வேண்டும் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் காலதாமதத்துடன் தாக்கல் செய்யப்பட்டு பல மேல்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கு, உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்கள் பலவும் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. உரிமையியல் வழக்குகளில் எதிர் வழக்குரையை (written statement) 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டு எதிர் வழக்குரை தாக்கல் செய்யப்படுவது 90 நாட்களுக்கு அதிகப்படுதல் கூடாது எனினும் 90 நாட்களுக்குப் பின்னர் தாக்கல் செய்த எதிர் வழக்குரையை (written statement) ஏற்றுக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்திருக்கின்றன.
