book

தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை)

₹720
எழுத்தாளர் :அக்களூர் இரவி, அருணா ராய்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :559
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788119034185
Add to Cart

அருணா ராயும் சங்கதன் கூட்டமைப்பும் இணைந்து எழுதியிருக்கும் இந்த நூல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும், அவர்களது கதைகளையும் சொல்கிறது. மிக அசாதாரணமான அந்த மனிதர்கள், உண்மையான அரசு நிர்வாகம் என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களை, குறிப்பாக ஊழல்வாதிகளைக் கேள்வி கேட்டதன் மூலம் நமக்குப் புரியவைத்தவர்கள். 'தி இந்து' உயிர்ப்புடன், எங்கும் பரவியிருந்த ஒரு புரட்சியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரம். அது ஒரு தகவல் புரட்சி; உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் ஊழலை, அரசாங்கத்தின் அத்துமீறல்களைத் தடுக்க முடியவில்லை என்றாலும் அதன் வேகத்தைக் குறைக்கும் திறன் கொண்ட புரட்சி. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' சமீபத்திய ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களில் ஆர்டிஐ மிக முக்கியமானது. சரியாகச் செயல்படுத்தப்பட்டால், நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளுக்கு, அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை வழங்கவும், ஓரளவு சமூக நீதியை உறுதிப்படுத்தவும் இது பயன்படும். ரொமிலா தாப்பர், வரலாற்றாசிரியர்