book

புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

புதுக்கவிதை-பழமையும் புதுமையும் 95 தள்ளி, எல்லோருக்கும் வாழ்க்கைத் தேவைகளை அளிக்கத் தகு வாய்ந்த சமுதாயத்தை நாமே உருவாக்குவோம் என்று நம்பிக்கையூட்டும் தொனியோடு பாடலை முடிக் கிறார். ஆனால் இந்த நிராசைக் கவிஞர், செருப்பில்லாத நிலைமை இயற்கை நியதிதான்; செருப்பு என்கிற ஆசை கோடை வந்த தும் தோன்றி, கோடை போனதும் போய்விடவேண்டியது தான் என்று கூறுகிறார். கோடை தோற்றுவிக்கும் உடல் உபாதைகள் போலத்தான் செருப்பு வேண்டும் என்ற ஆசையும் என்றுதான் கவிஞர் கருதுகிறார். இந்நிலை மாறவேண்டும் என்ற உணர்வைக் கவிதை தோற்றுவிக்கவில்லை. செருப்புத் தேவை என்ற ஏழையின் ஆசை, இயல்பாகவே கோடை போகும்போது மறைந்துவிடவேண்டியதுதானா? நிலைமையை மாற்றவேண்டும். மாற்றுவதற்குரிய உறுதிவேண்டும். இது ஒரு சமுதாயப் பிரச்சினை என்ற சமுதாய உணர்வு சிறிதும் கவிஞருக்கு இல்லை. - இவைதான் புதிர் கவிதைகள். ஒன்று கோபக்கனல் தெறிக்க வெளிவரும் நறுக்குக் கவிதை. அல்லது இயலாமையை வெளிக்காட்டும் இது போன்ற நிராசைக் கவிதை. ஆழ்ந்த உணர்ச்சியோடு, சமுதாயச் சீர்கேடுகளை எண்ணி எண்ணி அசைபோட்டு இயலாத்தனத்தைக் காட்டும் கவிதை களை, சில புதுக்கவிதை இலக்கண மரபு அணிகளை அணி வித்து எழுதுகிற கவிதைகள் சமுதாய உணர்வு, மனிதநேசம், வரலாற்று நோக்கு இவையெதுவுமில்லாத கவிஞர்களது படைப்புகளாக வெளிவருவது குறையவில்லை. ஆனால் சமூகக்குறைபாடு கண்டு குமுறுகிறவர்களிடையே, இப்போது மக்களின் சக்தியில் நம்பிக்கையும் வரலாற்று நன் னம்பிக்கையும் (historical optimism) தோன்றியிருக்கின்றன, இவை சில சமயங்களில் தெளிவாகவும் சில சமயங்களில் சந்தேக மேகங்களிடையே ஒளியாகவும் தோன்றுகின்றன,