book

உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கு. கணேசன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். செரிமானத்தின் போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது. புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாகின்றன.இந்த அமினோ அமிலங்கள் பல பிரிவு உண்டு. சில புரத உணவுகளில் பெரும்பாலும் அனைத்தும் கிடைத்து விடும். அசைவ உணவு, பால் பொருட்கள், மீன், முட்டை இவை ஒரு பிரிவு. தாவர வகையில் முழு தானியங்கள், பருப்புகள், கொட்டை எனபிரிவுகள் உண்டு.

உடலில் நீருக்குப் பிறகு அதிகம் இருப்பது புரத சத்துதான். உடல் உறுப்புகள், நகம், தலைமுடி, சருமம் இவை அனைத்திலும் புரதமே உள்ளது. புரதமே திசுக்களின் உருவாக்கத்திற்கு காரணம் ஆகின்றனது. அசைவம், பால், முட்டை இவை முழு புரதம் கிடைக்க காரணம் ஆகின்றன. தாவர வகையில் கொட்டை, விதை, பழங்கள், பருப்புகள் இவை அனைத்து வகைகளையும் கலந்து உண்ண வேண்டும். உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு இவற்றில் குறைந்த அளவே புரதம் உள்ளது.