book

மனமகிழ்ச்சி

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :6
Published on :2004
Out of Stock
Add to Alert List

 இதை படித்து, நன்கு சிரித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. நாம் மனம் திறந்து, வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல்கள் விரிவடையும்போது, இரத்த ஓட்டம் நன்றாக செயல்படும். இரத்த ஓட்டம் நன்கு செயல்படும்போது, நோய்கள் மாறி போகும். அதைதான் நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. சிலர் வாய் விட்டு சிரிக்க கூடாது என்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பதாகும். நம் முன்னோர்கள் அதை அறிந்திருந்தபடியால்தான் அதை குறித்து பழமொழி எழுதி வைத்துள்ளார்கள்.அதுப்போல முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும் என்றும் வேதம கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில் முறிந்த ஆவி உள்ள மனிதனின் White Blood Cells எண்ணிக்கை குறைவாக உற்பத்தி ஆவதால், அவனுக்கு வியாதியை எதிர்க்கும் தன்மை குறைவுபடுவதாக கூறுகிறார்கள். மற்றும் எலும்புகளில் Bone Marrow வினால் உருவாக்கப்படும் Red Blood Cells குறைவுபடுகிறது.வாய் விட்டு சிரிக்கும்போது, நம்மிடத்தில் காணப்படும் சுயப்பரிதாபம், துக்க உணர்ச்சி, மற்றும் சில வேளைகளில் பெரிய வியாதிகளும் கூட அகன்று போகும். அதற்கு அநேக சாட்சிகள் உண்டு. நம் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன.