book

மனிதன் மாறிவிட்டான்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :3
Published on :2016
ISBN :9788184766349
Out of Stock
Add to Alert List

இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதுதான் இந்த ‘மனிதன் மாறிவிட்டான்’! உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் ஏதாவது ஒரு காரணத்துக்காக நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த உறுப்பு என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்று இந்தப் புத்தகம் யோசிக்க வைக்கிறது. மனசுக்கும் உறுப்புக்கும் உள்ள தொடர்பையும் சம்பந்தத்தையும் இதைவிட எளிமையாக சொல்வது கடினம். ‘கண்கள் பலவிதமான உடல்மொழிகளைப் பரிமாறுகின்றன. கண்களைக் கீழே குவிப்பது அடக்கத்தை உணர்த்துகிறது. கண்களை உயர்த்துவது களங்கமற்ற தன்மையை உணர்த்துவதாக இருக்கிறது. கண்களை உற்றுப் பார்ப்பதும், மௌனமாக இருப்பதும் குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்த பயன்படுத்தும் உத்தி. கண்களை அகலப்படுத்துவது ஆச்சர்யத்துக்கான அறிகுறி. கண்களை குறுக்குவது கூர்மையாகப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் உடல்மொழி. கண்ணடிப்பது என்பது இருவருக்குள்ளான ரகசிய பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்று கண்களைப் பற்றி விவரிக்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். ஜூனியர் விகடனில் தொடராக வந்த சமயத்தில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் நூலின் ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கான விடைகளை தொடரின் இறுதியில் குறிப்பிட்டார். அவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட மூன்று விடைகளுமே பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் முடிவில் அவர் கொடுத்த சரியான விடையும் அதற்கான காரணமும் நியாமனதாக இருந்தது. தொடராக வந்த சமயத்தில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ‘மனிதன் மாறிவிட்டான்’ இப்போது நூல் வடிவத்தில் உங்கள் கைகளில் தவழ்கிறது. நிச்சயம் இது மீண்டும் உங்களைப் படிக்கத் தூண்டும். பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷமாகவும் இருக்கும்!