book

மகாகவி பாரதியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மன்னை சம்பத்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

தமிழ் நிலத்தில்  ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த  சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன்இவன்!

சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்குமீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!
எட்டயபுரம், பிறந்த ஊர், சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர், மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!