
யானைத் தாலி
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. காமுத்துரை
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285025
Add to Cartதமிழ்க் கதைக்களம் கண்டிராத உள்ளடக்கங்கள், கிராமத்தின் சொலவடைகள்,
பழமொழிகள், அவர்களது நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இவற்றோடு ஒரு தேர்ச்சியான
நடையையும் கொண்டிருக்கிறார் காமுத்துரை. உள்ளடக்கத்தோடு நுட்பமும்
கூடிவருகையில் பிரதி வாசகனுக்கு மேலும் சில உப பிரதிகளை நல்கிறது. ஒரு
சம்பவமோ, விவரணையோ, சம்பாஷணையோ எங்கு கதையாகிறது என்பது பல சமயம்
படைப்பாளிக்கும் பிடிபடாத சூட்சுமம். அதுவரை வேறொன்றாக இருந்த ஒன்று
படைப்புக்குள் ஆழ்ந்து கரையும் படைப்பாளியின் மனசொப்பிய இயக்கத்தில்
இன்னொன்றாய் மாறி மாயம் செய்துவிடும். பிடிபடாத கணிதச் சூத்திரத்தின்
விடைபோல அது சட்டென அது ஒரு கணத்தில் ஒளிர்கையில் மறுபடியும் இன்னொருமுறை
அது வாசிக்கக் கோருகிறது. அது இந்தத் தொகுதியின் பல கதைகளிலும்
நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கதைகளை இன்னும் நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்
காமுத்துரை... நான் வாழ்த்திக்கொண்டே இருக்கிறேன்!
