துவைதம்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இராமச்சந்திர ராவ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789351351795
Add to Cartமாத்வ சமூகம் இந்து மதத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் வசிக்கும் மாத்வர்கள் (குறிப்பாக கன்னட மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) பலரும் தாங்கள் பின்பற்றும் சித்தாந்தத்தைப்பற்றி தெளிவாக அறியாதவர்களாக, ஆனால் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
இதுவரை கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள பல புத்தகங்கள் துவைத சித்தாந்தத்தை மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. ஆனால், ‘துவைதம்’ குறித்த விரிவான விளக்கங்களுடன் தமிழ் மொழியில் புத்தகம் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் வாழும் சாதாரணமான பாமர மாத்வர்களும் மேற்படி விஷயத்தைத் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்வதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
மாபெரும் சமுத்திரமான துவைதத்தின் சித்தாந்தக் கருத்துகளை எளிதாக சுருக்கமாக எடுத்துச் சொல்வதுடன், துவைத சித்தாந்தம் என்பது என்ன? துவைதம் உருவானதற்கான காரணங்கள் என்னென்ன? அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றியெல்லாம் விவரிக்கும் இந்நூல் கூடவே துவைதத்தை நிறுவிய மகான் மத்வாச்சாரியார் வரலாறுடன், அவருக்குப் பின் வந்த மத்வ மகா புருஷர்களது சிறப்பையும் விளக்கிக் கூறுகிறது.
மாத்வத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு சிறிய திறவுகோலாக அமையும் என்பது நிச்சயம்.