book

பத்துப்பாட்டு யாப்பியல்

₹500
எழுத்தாளர் :மு. கஸ்தூரி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :592
பதிப்பு :1
ISBN :9789384915926
Add to Cart

இந்நூலில் காணப்பெறும் பல கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை, செய்யுள்களில் அமைந்துள்ள ஓசைநயத்திற்கு யாப்பு அமைப்பு எவ்விதம் உதவுகின்றது என்பதைச் செறிவாக ஆராய்ந்துள்ளார். தமிழ் யாப்பியல் மரபுகள் என்னும் இந்நூல் யாப்புப் பற்றிய அழுத்தமான கட்டுரைகளைக் கொண்ட நூலாக விளங்குகின்றது. பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களால் உருவாக்கப் பெற்ற ஆய்வாளர் யாப்பியல் குறித்து தொடர்ந்து ஆராய்வது மகிழ்ச்சியளிக்கிறது. - பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் பத்துப்பாட்டின் யாப்பு எனும் பொருண்மையில் முனைவர் பட்டப்பேற்றுக்காக ஆய்வை மேற்கொண்டிருந்த நிலையில் பரவலாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த தொல்காப்பியச் செய்யுளியலை உரைகளின் துணையோடு ஊன்றிப் பயின்று பெற்ற ஒளியில் எழுதப் பெற்ற ஒன்பது கட்டுரைகள் இந்நூலை அணிசெய்கின்றன. தொல்காப்பியம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் யாப்பியல் குறித்த முனைவர் மு.கஸ்தூரியின் பருந்துப் பார்வையினை இந்நாலில் காணலாம். நவமணிகளைப் போல அமைந்து ஒன்பது கட்டுரைகளும் ஒளிவீசுகின்றன. பேராசிரியர் வ.ஜெயதேவன் முதன்மைப் பதிப்பாசிரியர் தமிழ்ப் பேரகராதித் திருத்தப்பணித் திட்டம்