
பாரதம் போற்றும் பாரதியார் கவிதைகள் . வந்தே மாதரம்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :558
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
பாரதியார் கவிதைகள்
காலத்தால் நிலைத்து நிற்பவை. அவற்றை படிக்க விருப்பம் உள்ளோர்
இங்கிருக்கும் கவிதைகளை வாசித்து கொண்டாடலாம். பாரதியார் எண்ணற்ற
தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பாரதியார் தேசிய
கீதங்கள், பாரதியார் தமிழ்நாடு கவிதைகள், பாரதியார் சுதந்திர கவிதைகள்,
பாரதியார் பக்தி கவிதைகள் என ஏராளம் உண்டு. அதிலே பாரத நாடு பகுதியில்
இடம்பெற்றுள்ள கவிதைகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
ஈனப் பறையர்க ளேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? – பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
