சேது பந்தனம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌதம நீலாம்பரன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2000
Add to Cartசரித்திரக் கதையை எழுதுவதில் சில கஷ்டங்கள் இருக்கின்றன. கடந்த சமுதாயத்தைப் பற்றி எழுதப்படும் வரலாற்றுக் கதைக்கு முதலில் நல்ல ஆராய்ச்சி தேவை. அந்தப் பழைய சமுதாயத்தின் ஆசாபாசங்களை, சிக்கல்களை, சிறப்புகளை ஆராய்ந்து கதை நயம் கெடாதபடி நூலை எழுத வேண்டும். நிகழ்ச்சிகள் கால முரண்பாட்டுக்கு உள்ளாகாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனையும் சமாளித்து ஒரு உருப்படியான சுவையுள்ளல கதையை சிருஷ்டிப்பது சுலபமல்ல. அத்தகைய கஷ்டமான ஒரு பணியை கௌதம நீலாம்பரன் சேதுபந்தனத்தில் செவ்வனே செய்திருக்கிறார். திருமலை நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மைசூர் - தமிழகப் போர்கள், போர்ச்சுகீஸ், டச்சு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துக்காகவும் மதத்துக்காகவும் தெண்பாண்டிச் சீமையில் செய்த அட்டூழியங்கள், ஆகிய நிலைக்களங்களில் இந்தக் கதையின் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.